

சென்னை, சாலிகிராமம், கன்னியாபுரம் 4வது தெருவில் வசித்து வருபவர் பாக்கியம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி 20 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் கணவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். எனவே அவர் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டிற்கு வந்து செல்வர் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பாக்கியம் தனது மகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில் அவருக்கு அதே பகுதியை சேர்ந்த 50 வயதுடைய தட்சிணாமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களது பழக்கம் நாடளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி தட்சிணாமூர்த்தி அடிக்கடி பாக்கியம் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.
பாக்கியத்தின் மகள் கடந்த (ஜன 03) தேதி அவரது தாயிடம் உடல்நிலை சரியில்லை என தெரிவித்த நிலையில் பாக்கியம் அவருக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாக சொல்லப்படுகிறது. நீண்ட நேரம் தூங்கிய பின்னர் இளம் பெண் எழுந்து பார்த்த போது அவருக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரை யாரோ பாலியல் ரீதியாக காயப்படுத்தியது போல உணர்ந்திருக்கிறார். இது குறித்து தாயிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்காமல் சமாளித்திருகிறார்.
மீண்டும் தட்சிணாமூர்த்தி வீட்டிற்கு வந்த போது பாக்கியம் அவரது மகளுக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்ததாகவும், தூக்க நிலையில் யாரோ தனது மீது படுத்திருப்பதை உணர்ந்த இளம்பெண் கண் திறந்தபோது தட்சிணாமூர்த்தி இருப்பதை கண்டு தள்ளிவிட்டதாகவும் இளம் பெண் தெரிவித்தார். இது குறித்து பாக்கியத்திடம் கேட்ட போது அவர் இதனை வெளியில் சொல்லக்கூடாது என இப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
மேலும் பாக்கியம் இளம்பெண்ணை அறையில் பூட்டி வைத்து வெளியே செல்லவிடாமல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் அறையில் இருந்து தப்பித்த இளம்பெண் அவரது தோழியின் உதவியுடன் திருவண்ணாமலை உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தஞ்சமடைந்திருக்கிறார். உறவினர் வீட்டில் தங்கி இருந்த இப்பெண்ணுக்கு கடந்த (பிப் 18) ஆம் தேதி வயிறு வலி ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 7 வார கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் போலீசில் புகாரளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணை பாலியல் வண்கொடுமை செய்த தட்சிணாமூர்த்தி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த பெண்ணின் தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த தாயே மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ள காதலன் பாலியல் வன்கொடுமை செய்வதற்கு உடந்தையாக இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.