

பொள்ளாச்சி அருகே உள்ள கொண்டே கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி, இவருக்கு திருமணமாகி 16 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். மனைவி தற்போது அவருடன் இல்லாத நிலையில் பூபதி அவரது தாய் மயிலாத்தா மற்றும் இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இரண்டு சிறுமிகளும் அருகில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்த நிலையில் இளைய மகளான 16 வயது சிறுமிக்கு நெகமம் அருகே உள்ள கப்பளங்கரை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய அபிஷேக் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறி மூன்று வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் பட்டி இருவரும் காதலிக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆனால் இது திருமணத்திற்கான வயது இல்லை என குறி தொடர்ந்து படிக்கச் சொல்லி அறிவுரை கூறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அபிஷேக் சிறுமியை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்து சிறுமியிடம் தன்னை இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை பூபதி வீட்டிற்கு சென்ற அபிஷேக், அங்கிருந்த 16 வயது சிறுமியை தன்னை இப்போது திருமணம் செய்யுமாறு வற்புறுத்தி உள்ளார். இதை 16 வயது சிறுமி மறுக்கவே ஆத்திரமடைந்த அபிஷேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 16 வயது சிறுமியான கௌசியை குத்தி இருக்கிறார். மேலும் இதை தடுக்கச் சென்ற பாட்டி மயிலாத்தாவுயும் அக்காவான 17 வயது சிறுமியையும் சரமாரியாக குத்தி விட்டு தப்பியிருக்கிறார்.
இதில் 16 வயது சிறுமியான கௌசி மற்றும் பாட்டி மயிலாத்தாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் 17 வயது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 17 வயது சிறுமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்த நிலையில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த 16 வயது சிறுமி மற்றும் அவரது பாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான கரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கொலை செய்த அபிஷேக்கை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதனிடையில் 16 வயது சிறுமி மற்றும் பாட்டி மயிலாத்தாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் அபிஷேக் நெகமம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும் இரட்டைக் கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் விவகாரத்தில் இருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.