பாலியல் வன்கொடுமை மற்றும் பிற குற்றங்களை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு, 30 ஆண்டுகள் மத்திய சிறைத்தண்டனையும், வாழ்நாள் முழுவதும் கண்காணிப்புடன் கூடிய விடுதலையும் விதிக்கப்பட்டுள்ளது.
50 வயதான எட்வர்ட் ஜீன் ஸ்மித், நியூயார்க் நகரில் ஒரு வங்கி நிர்வாகியாகவும், பிளாக்ராக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும், ஹார்வர்ட் பல்கலைக்கழக பட்டதாரியாகவும் இருந்துள்ளார். மேலும், 2021 முதல் 2024-ல் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு வரை 'சிட்டி குரூப் இன்க்' நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிவந்துள்ளார். மேலும், அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
எட்வர்ட் ஜீன் ஸ்மித் ஒரு தொடர் பாலியல் வன்கொடுமையாளர், என்று அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் ஜூலை 28 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்த கொடூர பாலியல் குற்றங்களைச் செய்துகொண்டிருந்த அந்த சமயத்தில், வெளியில் இந்த குற்றங்கள் தெரியாமல் இருப்பதற்கு தன்னுடைய செல்வம், கல்வி மற்றும் அந்தஸ்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகத்தின்படி, 2015 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், ஸ்மித் இணையத்தில் சந்தித்த பல பெண்களுக்கு (அவர்களில் சிலர் 17 வயது சிறுமிகள்) மயக்க மருந்து கொடுத்துள்ளார் அல்லது கொடுக்க முயன்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை வேறு இடங்களில் இருந்து நியூயார்க் நகரத்திற்குத் தன்னுடன் வருமாறு பேசி அந்த பெண்களை அவர் சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர், சென்ட்ரல் பார்க் சவுத்தில் உள்ள தனது குடியிருப்பிலோ அல்லது வேறு இடங்களிலோ அவர்களை பாலியல் ரீதியாகவோ துன்புறுத்தியுள்ளார். சில சமயங்களில், அவர்களின் அனுமதியோ சம்மதமோ இன்றி அவர்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தோ அல்லது காணொளி எடுத்தோ உள்ளார் என்று அவர் மீது குற்றசாட்டுகள் .
சில சமயங்களில், சுயநினைவற்ற பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவதை காட்சிப்படுத்தும் ஆன்லைன் தளங்களில் அவர் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றியுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 2024-ல், சோதனை வாரண்ட் பெறப்பட்டு, அதிகாரிகள் ஸ்மித்தின் மின்னணு சாதனங்களில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யும் பொருள்கள், கோப்புகளை கண்டுபிடித்துள்ளனர். மேலும், ஸ்மித் தான் போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணை, ஆயிரக்கணக்கான டாலர்களை வழங்குவதாகக் கூறி, ஒரு போலி ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்தி விசாரணையைத் தடுக்க முயன்றுள்ளார், என்பதையும் கிளேட்டன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், அந்த போலி ஆவணங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு அவர் மற்ற நபர்களையும் அணுகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, பாலியல் வன்கொடுமை, குழந்தைப் பாலியல் ஆபாசப் படங்களைப் பெறுதல் மற்றும் நீதிக்கு இடையூறு விளைவித்தல் ஆகிய குற்றங்களை ஸ்மித் ஒப்புக்கொண்டார். தண்டனைக்கு முந்தைய சமர்ப்பிப்பில், ஸ்மித்தின் செயல்களுக்கு அவரது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறே “முதன்மையான காரணம்” என்று அவரது தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார். மேலும், “தன் காதலிகள் என்று அவர் நினைத்த பெண்களுடனான தனது உறவுகள் குறித்த தனது புரிதல் தவறானது என்பதையும், அவர்கள் அவருடனான சந்திப்புகளைத் தங்கள் சம்மதம் இல்லாத பாலியல் வன்கொடுமை என உணர்ந்து அவர் நிலைகுலைந்து போனார்” என்றும் அந்தத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
இது குறித்து, அரசு வழக்கறிஞர்கள் இந்த வாதமானது ஆட்டிசம் பாதிப்புள்ள சமூகத்தினருக்கு எதிரான இழிவான அவதூறு என்று கூறி நிராகரித்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஸ்மித்துக்கு அதிகபட்சமாக 80 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதால் அவருக்கு 30 ஆண்டுகள் தண்டனை வேண்டாம் என வாதிடப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஸ்மித் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துவிட்டதாகவும், இப்போது தனது தவறுகளுக்காக வருந்துவதாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இரண்டு பெண்களுக்கு பாலியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே போதை மருந்து கொடுத்தது, அத்துடன் சிறுமிகளை வைத்து பாலியல் ரீதியான புகைப்படங்களை உருவாக்கியது மற்றும் அதனை விற்றது ஆகிய குற்றங்களை ஸ்மித் ஒப்புக்கொண்டுள்ளார். பின்பு, ஏழு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 28, செவ்வாய்க்கிழமை அன்று அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.