க்ரைம்

“பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசமாக இருந்த மனைவி ” - பட்டப்பகலில் கொல்லப்பட்ட கோவில் பூசாரி… ஒரு வருட கள்ளக்காதலால் நடந்த வெறிச்செயல்!

ஜோடியாக வெளியில் சுற்றி வந்த நிலையில் இவர்களது கள்ளக்காதல் குறித்து ஒரு வருடத்திற்கு முன்பு...

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்னா பகுதியை சேர்ந்தவர் 42 வயதுடைய சித்தலிங்கப்பா. இவருக்கும் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த 32 வயதுடைய ஷாலினி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. சித்தலிங்கப்பா அருகில் உள்ள கோவிலில் பூசரியாக பணியாற்றி வந்த நிலையில் காலையில் கோவிலுக்கு சென்று மீண்டும் மாலை வீடு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

எனவே ஷாலினி வீட்டில் தனியாக இருந்த நிலையில் அவருக்கு பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் 33 வயதுடைய லாரி டிரைவர் ஹரிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இருவரும் அடிக்கடி ஜோடியாக வெளியில் சுற்றி வந்த நிலையில் இவர்களது கள்ளக்காதல் குறித்து ஒரு வருடத்திற்கு முன்பு அறிந்த சித்தலிங்கப்பா இருவரையும் கண்டித்திருக்கிறார்.

இருப்பினும் ஹரிஷுடன் ஷாலினி தொடர்ந்து பழகி வரவே கணவன் மனைவி ஒருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சித்தலிங்கப்பா ஷாலினியை அடித்து துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கணவனை பிரிந்து ஹரிஷுடன் வாழ நினைத்த ஷாலினி கணவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடவுள் பக்தி கொண்ட சித்தலிங்கப்பா வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

இதன் காரணமாக கடந்த (மார்ச் 06) ஆம் தேதி வெள்ளிக்கிழமை சித்தலிங்கப்பாவை கொள்ள ஹரிஷிற்கு ஷாலினி திட்டம் தீட்டி கொடுத்திருக்கிறார். அதன்படி சம்பவத்தன்று கோவிலுக்கு சென்ற சித்தலிங்கப்பாவை வழிமறித்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பர்கள் அவரை அடித்து கொலை செய்திருக்கின்றனர். பின்னர் உடல் மற்றும் இருசக்கர வாகனத்தை விபத்துபோல சித்தரிக்க அருகில் உள்ள குளத்தில் வீசி இருக்கின்றனர்.

பின்னர் கணவர் உடலை உறவினர்கள் துணையுடன் மீட்ட ஷாலினி அவசர அவசரமாக இறுதி சடங்கு செய்து புதைத்திருக்கிறார். இந்நிலையில் சித்தலிங்கப்பா இறப்பில் சந்தேகமடைந்த உறவினர்கள் புகாரளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த நிலையில் மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் தெரியவந்தது. மனைவி கணவனை கொலை செய்து நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.