“கள்ளக் காதலனுக்காக ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்” - குளத்தில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் உடல்… இப்படியும் ஒரு பொண்ணா?

காதலன் குழந்தை இருப்பதால் தனலட்சுமியுடன் சேர்ந்து வாழ மறுத்ததாகவும் அதனால்...
“கள்ளக் காதலனுக்காக ஒன்றரை வயது குழந்தையை கொன்ற தாய்” - குளத்தில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் உடல்… இப்படியும் ஒரு பொண்ணா?
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 21 வயதுடைய தனலட்சுமி. இவருக்கும் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த பாண்டித்துரை என்ற வாலிபருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் கணவனை பிரிந்த தனலட்சுமி அவரது தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். அப்போது அவரது தந்தை மதுரையில் நடத்தி வந்த கூழ் கடைக்கு சென்று தந்தைக்கு உதவிய இருந்துள்ளார்.

இந்நிலையில் தனலட்சுமிக்கும் அதே பகுதியில் வெங்காயம் கடை வைத்து நடத்தி வந்த மதுரை மாவட்டம் பூதக்குடி கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன் அழகன் என்பவருக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அறிமுகமாகி ஓரிரண்டு நாட்களில் நெருக்கமாக பழகி வந்த இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது எனவே மொத்தமாக அழகனுடன் வாழ நினைத்த தனலட்சுமி அதற்கு இடையூறாக இருந்த தனது ஒன்றரை வயது குழந்தையை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

Admin

அதன் படி நேற்று முன்தினம் தனலட்சுமி ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு ஊமச்சிகுளம் அருகே உள்ள குருந்த குளம் கண்மாய் பகுதிக்கு சென்ற தனலட்சுமி பெற்ற குழந்தையை கண்மாயில் தூக்கி வீசி விட்டு பின்னர் குழந்தை இறந்ததை உறுதி செய்து காதலனை தேடி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் காதலன் அவருடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மீண்டும் தந்தை வீட்டுக்கு சென்ற தனலட்சுமியிடம் குழந்தை பற்றி கேட்ட போது காதலன் அழகன் கண்மாயில் வீசி கொலை செய்துவிட்டார் என கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தனலட்சுமியின் தந்தை இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் காதலன் குழந்தை இருப்பதால் தனலட்சுமியுடன் சேர்ந்து வாழ மறுத்ததாகவும் அதனால் தனலட்சுமியை குழந்தையை கொன்றதும் தெரியவந்துள்ளது. எனவே தனலட்சுமி மற்றும் அவரது காதலன் அழகனை கைது செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com