க்ரைம்

“இரண்டு பெண்களுடன் கள்ளத்தொடர்பு” - இரண்டாவது காதலியுடன் சேர்ந்து முதல் காதலியை கொன்ற வாலிபர்… காட்டு பகுதியில் வீசப்பட்ட பெண்ணின் உடல்!

இரண்டு பெண்களையும் தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து நாகசனப்பள்ளி பாலம் அருகே உள்ள...

Mahalakshmi Somasundaram

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள கோட்பாக் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சுலோச்சனா. இவருக்கு திருமணமாகி ராஜேஷ் என்ற மகன் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவரது கணவர் உயிரிழந்திருக்கிறார். எனவே சுலோச்சனா கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

எனவே அவ்வப்போது ராஜு சுலோச்சனா வீட்டிற்கு சென்றுவருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மேலும் இருவரும் அடிக்கடி கணவன் மனைவி போல ஊர் சுற்றி வந்திருக்கின்றனர். இந்த நிலையில் ராஜுவிற்கு தன்னுடன் ஒன்றாக பணியாற்றி வரும் புலி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த பெண்ணுடனும் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த சுலோச்சனா ராஜுவிடம் புலியுடனான பழக்கத்தை கைவிடுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில் புலியுடன் சேர்ந்து வாழ நினைத்த ராஜு அதற்கு தடையாக உள்ள சுலோச்சனாவை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். அதன்படி கடந்த (மார்ச் 10) ஆம் தேதி இரவு சுலோச்சனாவிடம் புலியுடனான உறவை கைவிடுவதாக கூறிய ராஜு இரண்டு பெண்களையும் தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து நாகசனப்பள்ளி பாலம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அங்கு மூவரும் அமர்ந்து மது அருந்திக்கொண்டு பேசிய நிலையில் சுலோச்சனாவை, ராஜுவும் புலியும் சேர்ந்து அடித்து கொலை செய்து உடலை அங்கேயே வீசிவிட்டு வந்திருக்கின்றனர்.

பின்னர் தனது தாயை தேடிவந்த சுலோச்சனாவின் மகன் ராஜேஷ் காவல் துறையில் புகாரளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது நாகசனப்பள்ளி பாலம் பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சுலோச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராஜு மற்றும் புலியை கைது செய்து விசாரணை செய்தபோது அவர்கள் சுலோச்சனாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இளம் பெண் தகாத உறவால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.