தஞ்சாவூர் மாவட்டம், சிராஜ்பூர் நகரில் வசித்து வருபவர் செந்தில் என்கிற கேபிள் செந்தில். இவர் 2018 ஆம் ஆண்டு சிங்கப்பூரை பூர்வீகமாகக் கொண்ட முகமது பேகம் என்பவரது சொத்துக்களை போலி ஆவணம் தயாரித்து நிலங்களை மனை போட்டு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தெரிய வந்து முகமது பேகம் தஞ்சை மாவட்ட டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் கேபிள் செந்தில் அவரது மனைவி உட்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கேபிள் செந்தில் முன் ஜாமீன் பெற்ற நிலையில் தொடர்ந்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அவர் மீது மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவரை கைது செய்ய காவல்துறையினர் இன்று அவரது வீட்டிற்கு சென்றனர். இதனை அறிந்த கேபிள் செந்தில் வீட்டிலிருந்து வெளியே வர மறுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி வீட்டில் இருந்தபடியே ஜன்னல் வழியாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பொய்யானது என்றும் அந்த பெண் தான் மோசடியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அந்த இடத்தை விற்று தரம் பெண் கேட்ட நிலையில் அதற்கு உதவி செய்து சாதாரண புரோக்கர் பணத்தை மட்டுமே முகமது பேகத்தின் உறவினரிடம் பெற்றதாகவும். அந்த பணத்தையும் முறைப்படி வாங்கி வங்கியில் அதற்கான வரியை செலுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே முடிந்த இந்த வழக்கை மீண்டும் டிசிபி இன்ஸ்பெக்டர் ரவிமதி எடுத்து மிரட்டி வருவதாகவும் “இனிமே வாழ முடியாது நான் சாவ போறேன்” எனவும் கூறியிருக்கிறார். தொடர்ந்து இதனை தமிழ்நாடு அரசு உரிய வகையில் விசாரித்து தீர்வு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தன்னிடம் பணம் பறிக்கவும், விற்பனை செய்த சொத்துக்களையும் மீண்டும் அபகரிக்கும் நோக்கத்துடனே இவ்வாறு தனது முகமது பேகம் நாடகம் நடத்தி வருகிறார் என தெரிவித்தார். கைது செய்த போலீசாரிடம் செந்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டி பேட்டியளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.