UK child sexual abuse 
க்ரைம்

"ஸ்னாப்சாட் மூலம் பழகி குழந்தைகளுடன் உடலுறவு.." மது வாங்கி கொடுத்து உல்லாசமாக இருந்த வாலிபர்! சிக்கியதன் பின்னணி

ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து தன்னுடன் உறவில் இருப்பதாக நம்பவைத்து ஏமாற்றியுள்ளார்.

Vinvizhi Leninton

ஸ்னாப்சாட்டில் நண்பனைப்போல் பழகிவிட்டு, 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள் அருவருப்பான பாலியல் செயல்களில் ஈடுபடுமாறு கூறிய நபர் கைது.

லெஸ்டர்ஷயரின் கோல்வில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான கீரன் ரிட்ஜ்வே என்ற இளைஞர், ஒரு போலி அடையாளத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். ரிட்ஜ்வே தன்னிடம் பாலியல் செயல் புரிவதற்கு ஈடாக அந்தப் பெண்களுக்கு மதுபானம் வழங்குவதாக லெஸ்டர்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தச் சமயத்தில் அந்த இளம் பெண்களுக்கு வெறும் 12 மற்றும் 13 வயதுதான். கவலையடைந்த அவர்களின் பெற்றோர் 2021 ஜூலையில் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின் 2021 அக்டோபரில் ரிட்ஜ்வே கைது செய்யப்பட்ட பிறகு, அதிகாரிகள் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பலரைக் கண்டறிந்துள்ளனர்.

அந்தப் பாலியல் குற்றவாளி, தனது வயதைத் தவறாகக் கூறி, ஸ்னாப்சாட்டைப் பயன்படுத்தி மூன்று சிறுமிகளைத் தொடர்புகொண்டுள்ளார். சிறுமிகளை ஈர்ப்பதற்காக, ரிட்ஜ்வே அவர்களின் நண்பன் போல் நடித்ததாக செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரிட்ஜ்வே, ஜூன் 2017 முதல் பிப்ரவரி 2020 வரை அந்த மூவரையும் குறிவைத்து, அவர்களில் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து தன்னுடன் உறவில் இருப்பதாக நம்பவைத்து ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து காவல்துறையின் விசாரணையின் போது, ​​யாரோ ஒருவர் தனது விவரங்களைப் பயன்படுத்தி 'ஜோஷ் விட்கோம்ப்' என்ற பெயரில் ஒரு போலி ஸ்னாப்சாட் சுயவிவரத்தை உருவாக்கியதாக அவர் காவல்துறையிடம் பொய்யாகக் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் நடைபெற்ற விசாரணைகளில் ரிட்ஜ்வே தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை நிராகரித்ததாகவும், "கருணையின் காரணமாகவே" அந்தப் பெண்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்ததாகக் கூறியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குழந்தையுடனான பாலியல் செயல்பாடு உட்பட 5 குற்றச்சாட்டுகளுக்காக ரிட்ஜ்வே கடந்த மே மாதம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 10) அன்று அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவர் விடுதலையான பிறகு மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட உரிமக் காலத்திற்கு உட்படுத்தப்படுவார் என்றும் அவரது தண்டனைக்குக் கூடுதலாக, நீதிமன்றம் ரிட்ஜ்வேக்கு பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவையும் பிறப்பித்ததுடன், அவர் வாழ்நாள் முழுவதும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிட்ஜ்வே தனது சொந்த திருப்திக்காக மட்டுமே அந்தப் பெண்களை பாலியல் நடவடிக்கைகளுக்குத் தூண்டினார் என்று துப்பறியும் கான்ஸ்டபிள் ஸ்டேசி ஸ்வான் கூறியுள்ளார். மேலும், ரிட்ஜ்வே மேலும் பல சிறுமிகளையும் குறிவைத்திருக்கலாம் என லெஸ்டர்ஷயர் காவல்துறை சந்தேகிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட எவரும் 101 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமோ அல்லது காவல்துறையின் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ தங்களைத் தொடர்புகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.