திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகில் உள்ள முருகம்பட்டு ஊராட்சி பகுதியில் கோழி பண்ணையை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து நடத்தி வருகிறார். இதில் ஆடு மற்றும் கோழிகள் வளர்த்து வரப்படுகிறது இதனை பராமரிப்பதற்கு திருத்தணி நகராட்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்பவரை அங்கு பணியில் அமர்த்துகிறார்கள். எனவே வெண்ணிலா அவரது மூன்று மகன்கள் சுரேஷ் வயது -15, இரண்டாவது மகன் சூர்யா வயது-7, மூன்றாவது மகன் தேவா வயது- 4 ஆகியோர்களுடன் பண்ணை இடத்தில் தங்கி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.
ஐந்து மாதங்களாக பண்ணையால் தனது மகன்களுடன் பணியாற்றி வந்த வெண்ணிலா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தனது 15 மகனை பிப்ரவரி மாதம் அடித்து கொலை செய்து விட்டனர் என புகாரளித்திருக்கிறார் . திருத்தணி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் மேற்படி பாலமுருகன் என்பவர் பிப்ரவரி மாதம் தென் மாநிலங்களுக்கு குடும்பத்துடன் இன்ப சுற்றுலா சென்று விட்டு சில நாட்களுக்கு பிறகு பண்ணை நிலத்திற்கு சென்ற போது கோழி மற்றும் ஆடு போன்றவை குறைவாக இருந்துள்ளது. இதன் காரணமாக வெண்ணிலவிடம் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் பாலமுருகன் சூத்ரா சென்று வந்த பிறகு பக்கத்துக்கு நிலைத்து உரிமையாளர் ஆடுகள் தங்கள் நிலத்தை மேய்ச்சலுக்கு விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக பாலமுருகன் வெண்ணிலா மற்றும் அவரது சேர்ந்து ஆடு மேய்த்த 15 வயது சிறுவனிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பாலமுருகனின் நண்பனும் இது குறித்து கேட்டதில் 15 சிறுவன் சரியாக பதிலளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் மற்றும் வினோத் ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கியதில் சிறுவன் அப்பகுதியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். அதனை தொடர்ந்து இருவரும் சேர்ந்து சிறுவனின் உடலை குழி தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கின்றனர்.
எனவே போலீசார் இந்த சம்பவத்திற்கு காரணமான பாலமுருகன் மற்றும் வினோத் ஆகியோர்களை இரவோடு இரவாக அவர்கள் செல்போன் சிக்னலை வைத்து திருவள்ளூர் அருகில் கடம்பத்தூர் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் 15 வயது மாணவனை அடித்துக் கொன்று புதைத்ததாக கூறப்படும் முருகம்பட்டு கிராமத்தில் பண்ணை நிலத்தில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவர்கள் காவல்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் சடலத்தை தோண்டி எடுக்கும் பணி நடைபெற உள்ளது. மேலும் சடலம் புதைக்கப்பட்டு நான்கு மாதத்திற்கு மேல் ஆகின்றது என்பதால் அதே பகுதியில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் வெண்ணிலாவிடம் குற்றவாளி வினோத் “உன் மகன் ஏதோ இறந்துவிட்டான் உனக்கு மகனாக நான் இருக்கிறேன்.. உனக்கு நான் வீடு கட்டித் தருகிறேன்” என ஆசை வார்த்தை குறியும் மிரட்டியும் உண்மையை வெளியில் சொல்லக்கூடாது என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அமைதியாக இருந்த வெண்ணிலா மூன்று மாதத்திற்கு மேலாகியும் வீடு கட்டிக் கொடுக்கவில்லை பணம் தரவில்லை என்று பிரச்சனை ஏற்பட்டு இந்த சம்பவம் குறித்து திருத்தணி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.