கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, அவரது கணவர் டெம்போ டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஆசிரியை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பரபரப்பான புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "நான், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் டெம்போ டிரைவராக உள்ளார். நான் எனது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்தார். இதை கவனித்து நான் கூச்சலிட்டதும், அவர் ஓடிவிட்டார். பின்னர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார். அதையடுத்து இதுகுறித்து நான் யாரிடமும் சொல்லவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, நான் தனியாக இருக்கும்போது ஒரு நாள் எனது வீட்டுக்குள் வந்த ஜெயகாந்தன் அந்த வீடியோவை என்னிடம் காட்டி, “நான் சொல்வது போல் கேட்க வேண்டும்” என கூறி மிரட்டி, என்னுடன் உடலுறவில் ஈடுபட்டார். அதற்கு பிறகு பலமுறை வீடியோவை அழித்து விடுவதாக கூறி, நம்ப வைத்து உடலுறவு கொண்டார். அதையும் எனக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், என்னிடம் இருந்து ரூ.47,000 வரை ரொக்கத் தொகை வாங்கினார். இதனிடையே ஜெயகாந்தன் வெளிநாடு சென்றார். அந்த நேரத்தில், அவரது நண்பர் ஜெகன் என்பவர் வந்து மேற்கண்ட சம்பவத்தை கூறி பலமுறை என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதுபற்றி நான் எனது கணவரிடம் தெரிவித்தபோது, அவர் இது குறித்து கேட்டார். அவரையும் இருவரும் சேர்ந்து மிரட்டுகிறார்கள். எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என தன்னுடைய மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார் அந்த பெண் ஆசிரியர்.
இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையம் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தக்கலை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பலாத்காரம் செய்தல், மறைந்திருந்து ரகசியமாக வீடியோ எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் ஜெயகாந்தன் மற்றும் ஜெகன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் சொல்லும்போது, "உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீவிர விசாரணைக்குப் பிறகே இந்தச் சம்பவம் தொடர்பான முழு விவரங்களையும் சொல்ல முடியும்" என்று தெரிவித்தனர். எனினும் இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடிய நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி தக்கலை போலீசார் சம்பந்தப்பட்ட 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.