sathaam 
க்ரைம்

“உடலை மூன்றாக வெட்டிய கள்ளக்காதலி” - காதலனை புதைத்து எழுப்பப்பட்ட புதிய கட்டிடம்!

செல்போன் சிக்னல் மௌமிதா என்பவரது வீட்டில் கடைசியாக இருந்ததை கண்டறிந்துள்ளனர்

Mahalakshmi Somasundaram

மேற்கு வங்க மாநிலம் மால்டா என்ற பகுதியை சேர்ந்தவர் சதாம். இவருக்கு 30 வயதாகியும் திருமணமாகாத நிலையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வீடு கட்டித்தரும் வேலையை செய்து வருகிறார். வழக்கம் போல சில தினங்களுக்கு முன்பு காலையில் வேலைக்கு சென்ற சதாம் இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை, இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சதாமை பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சதாம் கிடைக்காத நிலையில் சதாமை கண்டுபிடித்து தரக்கோரி போலீசில் புகாரளித்துள்ளனர்.

பெற்றோர்களின் புகாரை ஏற்ற காவல்துறையினர். சதாமை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.  முதற்கட்டமாக சதாமின் செல்போன் சிக்னல்  மௌமிதா என்பவரது வீட்டில் கடைசியாக இருந்ததை கண்டறிந்துள்ளனர். பின்னர் மௌமிதா குறித்து சதாமின் பெற்றோரிடம் விசாரித்ததில் மௌமிதா சதாமின் தாய்மாமன் மனைவி என்பது அவர்கள் தினஜ்பூர் மாவட்டதில் வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

மௌமிதா வீட்டிற்கு சென்ற போலீசார் சதாமை குறித்து மௌமிதவிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் மௌமிதா சதாமை கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

mowmitha

அதில் “எனக்கும் எனது கணவரின் அக்கா மகனான சதாமுக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்தது அதனை அறிந்த எனது கணவர் என்னை கண்டித்து மால்டா பகுதியில் இருந்து தினஜ்பூருக்கு அழைத்து வந்தார். நானும் எனது கணவரின் பேச்சை கேட்டு சதாமுடன் இருக்கும் உறவை முறித்து கொள்ளலாம் என நினைத்தேன். இந்நிலையில் ஒரு நாள் வீட்டுக்கு வந்த சதாம் நாங்கள் முன்னர் நெருக்கமாக இருந்த வீடியோக்களை காட்டி இந்த உறவை முறித்து கொண்டால் வீடியோவை சமூக வலைத்தளங்களில், போட்டு விடுவேன் என மிரட்டினார்.

எனவே வேறு வழியில்லாமல் சதாம் கூறியது போல நானும் நடந்து கொண்டேன்.ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீறிய சதாம் நினைத்த நேரத்திற்கு வந்து அவருடன் தனிமையில் இருக்க கட்டாயப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த இரும்பு கம்பியை பயன்படுத்தி அவரை கொலை செய்துவிட்டேன். பின்னர் உடலை அப்புறப்படுத்த அவரின் உடலை மூன்றாக வெட்டி சிமெண்ட் கோணியில் போட்டு பக்கத்தில் கட்டபட்டு கொண்டிருந்த எனது தந்தையின் வீட்டில் அந்த மூட்டைகளை புதைத்து யாருக்கும் தெரியாமல் இருக்க நானே சிமெண்ட் போட்டு மூடிவிட்டேன்” என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

மௌமிதா கூறிய வாக்குமூலத்தின்படி சதாமின் உடலை தோண்டி எடுத்த போலீசார் மௌமிதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஒருவரை கொன்று உடலை மூன்றாக வெட்டி சிமெண்ட் போட்டு மூடியாது. அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்