க்ரைம்

“நீ தான் எங்க வீட்டு மருமகள்” - காதலித்து ஏமாற்றிய வாலிபர்.. திருமணம் செய்து கொள்ள சொல்லி வீட்டின் முன்பு தர்ணா செய்த காதலி!

இல்லை என்றால் விஷ அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக ..

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், ஆத்தூர் மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவரின் மகள் 27 வயதுடைய சௌந்தர்யா. பட்டதாரியான சௌந்தர்யா அவரது பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தார். பின்னர் வேலைக்கு சென்ற இடத்தில் ராம நாயக்கன் பாளையம் காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் தினகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் அப்போது தினகரன் சௌந்தரவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். எனவே இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.

பலமுறை இருவரும் தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் காதலித்த பிறகு தினகரன் சௌந்தர்யாவை மிரட்டி அவரை உடலளவில் துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த தினகரன் சௌந்தர்யாவிடம் திடீரென பேசுவதை நிறுத்திவிட்டு அவரை திருமணம் செய்யாமல் மறுத்து வந்துள்ளார். எனவே கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சௌந்தர்யா ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது காதலன் தினகரன் மீது புகார் அளித்துள்ளார்.

புகார் குறித்து காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் தினகரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக சௌந்தர்யாவுக்கு தகவல் கிடைத்து இதனால் காதலன் தினகரன் வீட்டின் முன்பு சௌந்தர்யா தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சௌந்தர்யா “தன்னை தினகரன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் இல்லை என்றால் விஷ அருந்தி தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் தன்னை காதலித்து ஏமாத்தி விட்டதாகவும் தினகரன் மட்டுமல்லாமல் அவரது பெற்றோர் உறவினர் உட்பட அனைவரும் தன்னிடம் பேசி வந்ததாகவும் “நீ தான் எங்க வீட்டு மருமகள்” என நம்பிக்கை கொடுத்து தற்போது அவர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் நடந்துகொள்கின்றனர்” என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சௌந்தர்யாவிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.