தன் காதலி தனக்கு முன் உறங்கினாலோ அல்லது குளியலறையில் மூன்று நிமிடங்களுக்கு மேல் செலவிட்டவோ அனுமதிக்காத அளவுக்கு சைக்கோத்தனமாக தன்னை சித்திரவதை செய்ததாக ஒரு பெண் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் காதலரான லீ யேட்ஸ், டெய்ஸியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு ஆண்டுகளாக "நரக வேதனைக்கு" உள்ளாக்கினார் என்றும், அவரது காதலி மீது சிறுநீர் கழிப்பது, தனக்காக சமைக்கக் கட்டாயப்படுத்துவது மற்றும் அவரது ஆடைத் தேர்வுகளைக் கண்காணிப்பது போன்றவை இதில் அடங்கும் என்றும் டெய்ஸி குற்றம் சாட்டியுள்ளார். இந்த கொடுமைகளுக்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 47 வயதான டெய்சி, தான் அனுபவித்த கொடுமைகளை நீதிமன்றத்தின் முன்வந்து கூறியுள்ளார்.
இது குறித்து டெய்சி, தான் கண்விழித்த நேரம் முதல் உறங்கச் செல்லும் நேரம் வரை, என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அவர் கட்டுப்படுத்தினார். அது அனைத்தும் அவர் தேர்வாகவே இருக்க வேண்டும் என்று விருப்பியதாக அவர் கூறினார். மேற்கு சசெக்ஸில் உள்ள க்ராலியைச் சேர்ந்த டெய்சியும், 47 வயதான யேட்ஸும், மே 2020-ல் ஒரு டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகியுள்ளார். யேட்ஸ் இனிமையாகத் தோன்றியுள்ளார். மேலும், அவர் அதீத ஆர்வத்துடன் இருந்ததையும், உறவில் ஆரம்பத்திலேயே அவரது காதலை வெளிப்படுத்தியதையும், அதிகாலை 3 மணிக்கு டெய்சிக்கு அழைத்ததையும், குறுஞ்செய்திகளால் அவரை திணறடித்ததையும் டெய்சி நினைவு கூர்ந்தார். இது அவருக்கு அப்போது பிடித்திருந்தது.
சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, யேட்ஸின் நடவடிக்கைகள் மாறத் தொடங்கியதாக டெய்சி கூறியுள்ளார். அது சாதாரணமாக என்ன ஆடை அணியவேண்டும் என்பதில் இருந்து தொடங்கியுள்ளது. யேட்ஸ், டெய்ஸியின் அன்றாடப் பணிகளின்போது நேரத்தைக் கணக்கிட்டதாகவும், அவை தனது எதிர்பார்ப்புகளை மீறும்போது கடுங்கோபம் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், டெய்சி கழிப்பறைக்குச் செல்வதைக் கண்காணித்ததோடு, மூன்று நிமிடங்களுக்குள் வெளியே வராவிட்டால் வலுக்கட்டாயமாக கழிவறைக்குள்ளே நுழைந்ததாகவும் டெய்சி கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
மேலும், யேட்ஸ், டெய்சியின் தூக்க நேர அட்டவணையையும் மாற்றியமைத்து, யேட்ஸுக்கு முன் தன்னை உறங்கச் செல்லவோ அல்லது தாமதமாக உறங்கவோ அனுமதிக்க மறுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெய்சி கொஞ்சம் அதிக நேரம் தூங்க விரும்பினாலோ அல்லது நண்பர்களுடன் வெளியே செல்ல விரும்பினாலோ யேட்ஸ் கோபப்பட ஆரம்பித்துள்ளார். மறுப்பு தெரிவித்தால் மிரட்டியும் உள்ளார். யேட்ஸ் பலமுறை டெய்சி மீது துப்பியதாகவும், சிறுநீர் கழித்ததாகவும், பொருட்களை வீசியதாகவும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. டெய்ஸி இது குறித்து மேலும் கூறியதாவது, "யேட்ஸ் என் மீது முதன்முறை சிறுநீர் கழித்தபோது, 'இனி நீ எனக்குச் சொந்தம்' என்று கூறினார்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அது ஒரு நரகமாக டெய்சிக்கு இருந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். "உடல்ரீதியாக என்னால் அதற்கு மேல் எதையும் செய்ய முடியவில்லை. அவரிடம் 'இல்லை' என்று சொல்லவே முடியாது, அது அவருக்கு பிடிக்காத வார்த்தை" என்று அவர் தெரிவித்துள்ளார். 2022, ஜூன் 19 அன்று, வாகன நிறுத்துமிடத்தில் டெய்ஸி தாக்கப்பட்டதை கண்டதாக அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வினையடுத்து, காவல்துறையினர் டெய்ஸியின் வீட்டு வாசலுக்கு வந்தபோது அந்தத் துன்பியல் நிகழ்வு முடிவுக்கு வந்துள்ளது. யேட்ஸைத் தன் வீட்டை விட்டு வெளியேறுமாறு பலமுறை கேட்டும் அது பலனளிக்காததால், தப்பிப்பதற்கு இதுவே தனது கடைசி வாய்ப்பாக இருக்கலாம் என்பதை டெய்ஸி உணர்ந்ததாக கூறியுள்ளார்.
டெய்சி தான் அனுபவித்த துன்புறுத்தல் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்ததை அடுத்து, யேட்ஸ் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். மேலும், ஏப்ரல் 2 அன்று லூயிஸ் கிரவுன் நீதிமன்றத்தில் யேட்ஸ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். மேலும், யேட்ஸ் டெய்சியை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் டெய்சி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து, அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது, மேலும் சாட்சியமளிக்கும்போது அனைத்து சம்பவங்களையும் நினைவுபடுத்திக் கொள்ள, துன்புறுத்தல் முழுவதும் தான் எழுதி வந்த நாட்குறிப்புகளே உதவியதாக டெய்சி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்