திருவண்ணாமலை செங்கம் பகுதியை சேர்ந்தவர் துரை. இவருக்கு திருமணமாகி தாட்சாயிணி என்ற மனைவியும் 17 வயதில் மகனும் உள்ளனர். விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்த துரைக்கு அதே பகுதியை சேர்ந்த சில பெண்களுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. எப்போதும் துரை போனில் யாரிடமோ பேசி கொண்டே இருந்ததால் சந்தேகமடைந்த தாட்சாயிணி துரையின் போன் எடுத்து பார்த்துள்ளார்.
அப்போது துரையின் போனில் அவர் சிலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவர்களுடன் பேசும் ஆதாரங்களும் கிடைத்துள்ளது. இதை பற்றி துரையிடம் கேட்டதற்கு அவர் சரியான பதில் அளிக்காமல் தாட்சாயிணி இடம் சத்தம் போட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் துரை குடிக்கும் அடிமையாகியுள்ளார். எனவே வீட்டிற்கும் மகனின் படிப்பிற்கும் எந்த பணமும் தராததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை காப்பாற்ற தாட்சாயிணி அருகில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு கடந்த ஏழு மாதத்திற்கு முன்னாள் வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். இதில் வரும் சம்பளத்தை வைத்து மகனை படிக்க வைத்து வந்துள்ளார்.
இந்த சூழலில் ஒரு நாள் தாட்சாயிணி வேலை முடித்து வீடு திரும்பும் போது துரை வேறொரு பெண்ணுடன் செல்வதை பார்த்துள்ளார். வீட்டிற்கு வந்த தாட்சாயிணி இதை பற்றி துரையிடம் கேட்டுள்ளார். அதற்கு துரை "நான் எப்படி வேணா இருப்பான் அதை எல்லாம் நீ ஏன் கேக்குற”என தாட்சாயிணி இடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்நிலையில் மறுநாள் காலை (ஜூன் 09)வேலைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்த தாட்சாயிணி இடம் துரை தேவையற்ற வார்த்தைகளால் பேசியும் நடத்தையை குறை கூறியும் சண்டை போட்டுள்ளார்.இதனால் அன்று வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்துள்ளார் தாட்சாயிணி. மாலை குடித்துவிட்டு வந்த துரை மீண்டும் தாட்சாயிணியை தவறாக பேசியுள்ளார்.
இதனால் கோபமடைந்த தாட்சாயினியும் துரையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். போதையில் இருந்த துரை ஆத்திரம் தலைக்கேறி அருகில் இருந்த கட்டையை எடுத்து தாட்சாயினியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தாட்சாயிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து துரை அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து தாட்சாயினியின் உறவினர்கள் போலீசில் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாட்சாயினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து துரையை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று பதுங்கியிருந்த துரையை கைது செய்த போலீசார் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை அந்த தாட்சாயினியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு துரையை வழக்கு பதிவு செய்யாமல் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.