rajesh kanna and gayathri 
க்ரைம்

“உணவு வாங்க போலாம் வா” என அழைத்து.. மனைவியின் உயிரை பறித்த கணவன்.. 12 மணி நேரத்தில் செக் வைத்த போலீஸ்!

சித்ரா கணவரிடம் கோபித்துக் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன் திருப்பூரில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு

Mahalakshmi Somasundaram

மதுரையை சேர்ந்த ராஜேஷ் கண்ணா என்பவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சித்ராவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு 9 மற்றும் ஒன்றரை வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் ராஜேஷ் கண்ணாவிற்கு சித்ராவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதனால் இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சித்ரா கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இருந்த சண்டை முற்றியுள்ளது.

இந்த பிரச்சனையால் சித்ரா கணவரிடம் கோபித்துக் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன் திருப்பூரில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார்.அம்மா வீட்டில் தங்கியிருந்த சித்ரா வித்தியாலயம் பகுதியில் உள்ள, தனியார் பல் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் திருப்பூர் வந்த ராஜேஷ் கண்ணா “ நான் திருந்திவிட்டேன் இதுவரை செய்த செயலுக்காக மனம் வருந்துகிறேன். இனிமே திருப்பூரிலேயே வேலை செய்கிறேன்” என மனைவியிடம் கூறியிருக்கிறார்.மேலும் மனைவியுடன் சேர்ந்து மாமியார் வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் ராஜேஷ் கண்ணா திருப்பூருக்கு அருகில் உள்ள “தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவோம்” என சித்ராவை அழைத்திருக்கிறார். இந்நிலையில் புதன்கிழமை மாலை மருத்துவமனைக்கு சென்றிருந்த சித்ராவைவீட்டிற்கு அழைத்து வந்த ராஜேஷ், “குழந்தைகளுக்கு உணவு வாங்கி வருகிறோம்” என மாமியாரிடம் சொல்லிவிட்டு சித்ராவை மீண்டும் வெளியில் அழைத்து சென்றிருக்கிறார்.

திருப்பூருக்கு அருகில் உள்ள தென்னம்பாளையம் சென்று இருவரும் பொருட்களை வாங்கி கொண்டு. வீடு திரும்பிய போது, ஒரு காலி இடத்திற்கு சித்ராவை அழைத்து சென்ற ராஜேஷ் கண்ணா அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.பின்னர் மாமியார் வீட்டிற்கு சென்ற அவர் “சித்ரா கடையில் இருக்கிறாள், நான் இப்போது குழந்தைகளை அழைத்து செல்ல வந்தேன். நாங்கள் சாப்பிட்டுவிட்டு அப்படியே உறவினர் வீட்டிற்கு செல்கிறோம்” என கூறிவிட்டு குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார்.

வியாழக்கிழமை காலை சித்ராவின் உடலை பார்த்த, பொது மக்கள் போலீசிற்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தாய் சீதாலட்சுமியிடம் விசாரித்துள்ளனர் மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து சித்ராவை கொன்றது ராஜேஷ் கண்ணா தான் என்பதை அறிந்த போலீசார் , மதுரையில் பதுங்கியிருந்த அவரை நேற்று மாலை தனிப்படை அமைத்து கைது செய்தனர்.

வியாழக்கிழமை காலையில் நடந்த இந்த சம்பவத்தை அதே நாள் மாலிக்குள்ளாகவே குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்துள்ளது உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்