கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே காஞ்சிரக்கோடு பகுதியை சேர்ந்தவர் 56 வயதான ஜெஸ்டின் குமார். இவர் அதே பகுதியில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்த நிலையில் இவருக்கு பக்கத்துக்கு ஊரை சேர்ந்த 50 வயதான கஸ்தூரி என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு மகன்கள் மாற்றம் ஒரு மகள் என் மூன்று பிள்ளைகள் உள்ளனர். கஸ்தூரியின் மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராகவும், மூத்த மகன் வெளிநாட்டிலும் இளைய மகன் கேரளாவிலும் பணியாற்றி வருகின்றனர்.
குடிபோதைக்கு அடிமையான ஜெஸ்டின் குமார் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் கஸ்தூரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்து கொடுமை படுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். மேலும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் தேவை இல்லாமல் வம்பிழுத்து பிரச்சனை செய்வதையும் வழக்கமாக கொண்டிருந்துள்ளார். மகன்கள் பலமுறை கண்டித்தும் ஜெஸ்டின் குமார் தனது குடிப்பழக்கத்தை கைவிடாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு மகள் வீட்டின் கீழ் தளத்தில் அமர்ந்திருந்த போது கணவன் மனைவி இருவரும் வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இதில் சுய கட்டுப்பாட்டை இழந்த ஜெஸ்டின் குமார் தன்னிடம் இருந்த கத்தியால் கஸ்தூரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து எதுவும் நடக்காதது போல் கேரளாவுக்கு வேலைக்கு செல்வது போல் தோளில் பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்பிச் சென்றுள்ளார்.
தாயார் மேல் தளத்தில் தூங்கி கொண்டிருப்பதாக எண்ணிய மகள் வெகு நேரமாகியும் தாயார் கீழே வராததால் அச்சமடைந்து மேலே சென்று பார்த்த போது தாயார் கழுத்து அறுபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகள் சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை அழைத்தனர் அவர்கள் வந்து பார்த்தபோது கஸ்தூரி இறந்து போனது தெரியவந்தது இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் கஸ்தூரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தப்பி ஓடிய ஜெஸ்டின் குமாரை தேடி வந்தனர். தப்பி ஓடிய ஜெஸ்டின் குமார் தனது செல்போனை ஆன் செய்து வைத்திருந்ததால் போலீசார் அந்த நம்பரை பின்தொடர்ந்து சென்ற நிலையில் ஜெஸ்டின் குமார் நாகர்கோவிலில் இருப்பது தெரியவந்தது இதனையடுத்து மார்த்தாண்டம் போலீசார் நாகர்கோவில் விரைந்து அங்கு பேருந்து நிலையித்தில் வேறு மாவட்டத்திற்கு தப்பிச் செல்வதற்காக நின்றிருந்த ஜெஸ்டின் குமாரை போலீசார் அதிரடியாக கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கணவன் கழுத்தறுத்து கொன்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.