husband pushed wife to took her life. 
க்ரைம்

“ஒன்றரை வயசு குழந்தைக்கு அம்மா இல்லாம பண்ணிட்டாங்க” 19 வயது மனைவியை தற்கொலைக்கு தூண்டி தப்பியோடிய கணவன்..!

Saleth stephi graph

புதுக்கோட்டை மாவட்டம் களாமாவூர் கொம்பத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜெய அற்புதம் (19)  இவருக்கும் திருமயம் அருகே உள்ள மணவாளங்கரை கிராமத்தைச் சேர்ந்த வீரமணி (30) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு நேற்று ஜெய அற்புதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனை அடுத்து  ஜெய அற்புதத்தின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

திரும்பிப்போகும் வழியில் கருவேப்பிலையான் கேட் பகுதியில் ஜெயஅற்புதம் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸை மறித்துள்ள அவரது உறவினர்கள் அவரின் உயிரிழப்பிற்கு அவரது கணவரும் அவரின் குடும்பத்தினரும் தான் காரணம், அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அற்புதத்தின் உடலை வீரமணி இல்லத்திற்கே திருப்பி எடுத்து செல்ல வேண்டும் என  வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போலீசாருக்கும் பெண்ணின் உறவினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் பெண்ணின் உடலை இடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். வீரமணியின் சித்தப்பாதான் அவர் உடலுக்கு கொல்லி வைத்தார்.  இந்த சலசப்புக்கு மத்தியில் ஜெய அற்புதத்தின் கணவரும், மாமியாரும் தலைமறைவாகியுள்ளனர்.

இந்நிலையில் ஜெய அற்புதம் தாயார் மாரிக்கண்ணு கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு துண்டியதாக வழக்கு பதிவு செய்து ஜெயா அற்புதம் மாமியார் வள்ளிக்கண்ணு மற்றும் அவரது கணவர் வீரமணி ஆகிய இருவரையும் திருமயம் காவல்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்