க்ரைம்

“சந்தேகத்தால் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்” - குழந்தைகள் கண்முன்னே துடிதுடித்து இறந்த தாய்.. வாஷ்பேஷனில் கத்தியை கழுவிய கொடூரம்!

சாதாரணமாக கழிவறைக்கு சென்று குளித்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றிருக்கிறார்...

Mahalakshmi Somasundaram

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வட்டியூரகாவு பகுதியை சேர்ந்தவர்கள் 46 வயதுடைய சுரேஷ். மன்னாந்தலை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஹசீனா பீவி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதி தங்களது குழந்தைகளுடன் நாலாஞ்சிர பகுதியில் கடந்த சில மாதங்களாக வசித்து வந்த நிலையில் மனைவி ஹசீனா பீவியின் நடத்தையின் மீது சுரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. தொடர்ந்து சுரேஷ் மனைவியை சந்தேகப்பட்டு தேவையற்ற வார்த்தைகள் பேசி வந்த நிலையில் வருத்தமடைந்த ஹசீனா பீவி வீட்டை விட்டு வெளியேறி தனது உறவினர் வீட்டில் நான்கு வாரங்களாக இருந்து வருகின்றனர். பின்னர் வீட்டிற்கு திரும்பிய நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு முற்றியுள்ளது. இதனால் கோபமடைந்த மனைவி செவ்வாய் கிழமை இரவு காவல் நிலையத்திற்கு சென்று சுரேஷ் மீது புகாரளித்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து போலீசார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் சுரேஷ் தன மீது புகாரளித்ததால் ஹசீனா மீது கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஹசீனாவை கடுமையாக தாக்கிய கணவர் சுரேஷ் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து குழந்தைகள் கண்முன்னே துடி துடிக்க கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். பின்னர் அதனை தொடர்ந்து ரத்தபடிந்த கத்தி மற்றும் கைகளையே வாஷ்பேஷனில் கழுவிவிட்டு சாதாரணமாக கழிவறைக்கு சென்று குளித்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றிருக்கிறார்.

பின்னர் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஹசீனாவின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஹசீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற சுரேஷை தேடி வருகின்றனர். குழந்தைகள் கண்முன்னே கணவன் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்