பிரான்சில் வங்கி மேலாளராகப் பணியாற்றிய தனது முன்னாள் காதலன் தன்னை ஏழு ஆண்டுகளாக ஏமாற்றி, கொடூரமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியதாக 42 வயது பெண் ஒருவர் நீதிமன்றத்தில் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார். லேடிசியா ஆர் (Laetitia R) என்ற அந்தப் பெண், கியோம் புக்கி (Guillaume Bucci) என்ற தனது காதலன் தன்னைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்ததாகக் கூறியுள்ளார். 2015 முதல் 2022 வரை தங்களை உறவுக்குள் சித்திரவதை செய்த அந்தப் பெண், ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமான பாலியல் செயல்கள் என்று நினைத்தவை, பின்னர் தீவிரமான வன்முறையாக மாறியதாகத் தெரிவித்துள்ளார்.
தான் அவரிடமிருந்து பிரிந்து சென்றால், எங்களிடம் இருந்த அந்தரங்க வீடியோக்களை அவர் பொதுவெளியில் வெளியிட்டு விடுவார் என்ற பயத்தில், தான் தொடர்ந்து மௌனமாக இருந்ததாக லேடிசியா கூறியுள்ளார். காதலன் புக்கி, லேடிசியாவைத் தனது நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அறிமுகம் இல்லாத அந்நியர்களுக்கு விற்பனை செய்துள்ளார். அந்தப் பெண் எந்தெந்த ஆண்களுடன் உறவு கொள்ள வேண்டும் என்பதை அந்த ஆணே முடிவு செய்துள்ளார். தான் எத்தனை ஆண்களுடன் உறவு கொண்டேன் என்ற பட்டியலை எழுதி வைக்கச் சொல்லியுள்ளார். தான் 487 ஆண்களுடன் கட்டாயப்படுத்தி உறவு கொண்டதாகவும், சிலரை பத்து முறைக்கும் மேலாகச் சந்தித்துள்ளதாகவும் அவர் கோபத்துடன் கூறினார்.
நான்கு குழந்தைகளுக்குத் தாயான லேடிசியா, இந்தத் சித்ரவதை எப்படி மெல்ல மெல்லத் தொடங்கியது என்று விவரித்தார். முதலில் பிற ஆண்களுடன் உறவு கொள்ள வற்புறுத்தியவர், பின்னர் 2015-ல் ஒரு கிறிஸ்துமஸ் ஈவ் நாளில், நெடுஞ்சாலை ஒன்றில் இருந்த பெட்ரோல் பங்க் பகுதியில் அந்நியர்களுக்குத் தன்னை அர்ப்பணிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். அவர் போனில் கேட்டுக்கொண்டே இருக்க, தான் அந்நியர்களிடம் செல்ல வேண்டியிருந்ததாகக் கூறிய அந்தப் பெண், உள்ளுக்குள்ளே தான் செத்துப்போனதாக உணர்ந்ததாகக் கூறி நீதிமன்றத்தையே உலுக்கினார். இந்தச் சித்ரவதைகளால் அந்தப் பெண் தற்போது பெரும் உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளார்.
கியோம் புக்கி என்ற அந்த நபர், கழுத்தை நெரித்தல், சுடுதல் மற்றும் மிருகங்களுடனான உறவு போன்ற செயல்களைத் தான் செய்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், இவை அனைத்தும் தங்களுக்குள் இருந்த பரஸ்பர விருப்பத்தின் பேரில் நடந்த 'பாலியல் விளையாட்டு' என்று அவர் சாதித்தார். யாரையும் துன்புறுத்துவதாகத் தான் நினைக்கவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் இவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினர். ஆனால், நீதிமன்றம் அவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு முடித்த பிறகுதான் அவர் பரோல் பெற தகுதியுடையவர் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜிசெல் பெலிக்கோட் என்ற பெண், தனது கணவரால் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, அந்நியர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கு கொடுத்த தைரியத்தால்தான் லேடிசியா தனது துயரமான கதையை வெளிப்படையாகப் பேச முன்வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.