“எதிர் வீட்டுக்காரருடன் உல்லாசத்தில் இருந்த மனைவி” - தாயை அந்த கோலத்தில் பார்த்த மகன்கள்.. இரவோடு இரவாக கள்ளக்காதலனுக்கு கொடூரம்!

பாலசுப்பிரமணியம், மருதாயம்மாள் ஆகிய இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்..
victim and accust
victim and accust
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே உள்ள ரெட்டியார்பட்டி சுடுகாட்டில் கன்னி வாடியை சேர்ந்த குருசாமி என்பவரது மகன்‌ 48 வயதுடைய பாலசுப்ரமணி கடந்த (மே 22) ஆம் தேதி வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யபட்டார்.இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப், டி.எஸ்.பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், கன்னிவாடி சார்பு ஆய்வாளர் சிவராமன் ஆகியோர் விசாரணை செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் கன்னிவாடி ரெட்டியார் பட்டியைச் காலனியை சேர்ந்த காசிராஜா (வயது 42). அவரது மகன்கள் சஞ்சய் (வயது 20) மனோஜ் குமார் (வயது 21) வாடிப்பட்டி தாலுகா கச்சிராயிருப்பு பகுதியை சேர்ந்த ஜானகிராமன் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் காசிராஜாவின் மனைவி மருதாயம்மாளுக்கும் கொலையான பாலசுப்பிரமணியத்திற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரிய வந்தது. சம்பவத்தன்று காசிராஜன் தனது வீட்டில் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் தண்ணீர் குடிக்க எ எழுந்து பார்த்தபோது தனது மனைவி மருதாயம்மாள் வீட்டில் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

எனவே உடனடியாக தனது மகன்களுடன் காசிராஜன் தனது மனைவியை தேடி சென்ற போது வீட்டின் வெளியே மருதாயம்மாள் இல்லாததை அடுத்து பாலசுப்பிரமணியம் வீட்டில் பாலசுப்பிரமணியம், மருதாயம்மாள் ஆகிய இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனைப் பார்த்து கணவன் மற்றும் மகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக தனது உறவினரான வாடிப்பட்டி கச்சராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஜானகிராமனுக்கு (25) தகவல் தெரிவிக்கவே ஜானகிராமன் பாலசுப்பிரமணியத்தை தீர்த்து கட்டச் சொல்லி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விட்டார். இதனையடுத்து நால்வரும் பாலசுப்பிரமணியத்தை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றவே ஜானகிராமன் கையில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு பாலசுப்பிரமணியத்தை தாக்கியுள்ளார். பாலசுப்ரமணியம் பதிலுக்கு அவர்களை தாக்கியதில் கடும் கோபமடைந்த நால்வரும் பாலசுப்ரமணியத்தை அருகில் இருந்த நில அளவை கல்லை (சர்வே கல்) எடுத்து அடித்து கொலை செய்துவிட்டு அந்த கல்லை கிணற்றுக்குள் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டது தெரியவந்துள்ளது. அதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த போலீசார் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் தகராறில் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com