சிறுமியின் குளியலறை காட்சிகளை படம் பிடித்த வாலிபர்! தர்மஅடி கொடுத்து ஹாஸ்பிடலுக்கு அனுப்பிய கன்னியாகுமரி மக்கள்!

அதற்கிடையே ஒரு செல்போன் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சல் போட்டுள்ளார்
pocso case
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, இரவு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி, 16 வயது சிறுமியின் குளியலறை காட்சிகளை வெண்டிலேசன் ஜன்னல் கண்ணாடிகளை அகற்றி செல்போனில் ரகசியமாக படம் பிடித்த கட்டிட தொழிலாளி. சுற்றி வளைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் குளியலறைக்கு சென்றுள்ளார். மின் விளக்கை ஆன் செய்த சற்று நேரத்தில் குளியலறைக்கு வெளியே ஆள் நடமாட்டம் இருப்பதை போன்ற சத்தம் கேட்டுள்ளது. சந்தேகத்தில் சிறுமி குளியலறை வெண்டிலேஷன் ஜன்னலை பார்த்துள்ளார். அப்போது அதில் உள்ள ஒரு கண்ணாடி அகற்றப்பட்டும் அதற்கிடையே ஒரு செல்போன் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சல் போட்டுள்ளார். 

சிறுமியின் சத்தம் கேட்டு வந்த பெற்றோர் மற்றும் அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் சிறுமியை விசாரித்தனர். நடந்ததை கூறிய அழுதுள்ளார் சிறுமி. அதன்பின் வீட்டை சுற்றி தேட தொடங்கிய பொதுமக்கள், குளியலறை அருகே உள்ள காம்பவுண்ட் சுவர் மீது ஒருவர் அமர்ந்திருந்தை பார்த்துள்ளனர். அவரை துரத்தி புடித்த பொதுமக்களுக்கு, அவர் கட்டிட தொழிலாளியான 34 வயது இளைஞர் ஷானு என்பவர் தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்து பிடித்த பொதுமக்கள், அவனை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்த ஷானு குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷானு வின் செல்போனை பறிமுதல் செய்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில் கட்டிட தொழிலாளி ஷானு, அந்த சிறுமியின் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி,  சிறுமியின் குளியலறை காட்சிகளை ரகசியமாக செல்போனில் படம் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஷானு மீது தகவல் தொழில்நுட்ப சாதனத்தை தவறாக பயன்படுத்துதல் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார். மேலும் ஷானுவை கைது செய்து மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com