பாபநாசம் அருகே குடும்பப் பிரச்சினையில் மாமனார், மருமகளை கடப்பாரையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாபேட்டை போலீசார் கொலையாளி சிவசாமியை கைது செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை புத்தூர் மணக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (65). விவசாயம் பார்த்து வரும் இவருக்கு இரண்டு ராஜா, ராமு என்ற இரு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ராஜா என்பவருக்கு வனவள்ளி என்பவருடன் திருமணம் நடந்து தேவராஜ் என்ற மகன் உள்ளார். பின்னர் ராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அதன்பிறகு வனவள்ளியை.. இளைய மகன் ராமுவுக்கு மறுமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு லோகேஷ் என்ற மகன் பிறந்த நிலையில் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். வனவள்ளியின் கணவர் ராமு திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். மற்றவர்கள் தஞ்சாவூரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வனவள்ளியின் மாமியார் மலர்கொடி மணக்கொல்லை கிராம கோவிலுக்கு சென்று வந்துள்ளார். அங்கு அளித்த பிரசாதத்தை வாங்கி வந்த அவர் கணவர் சிவசாமிக்கு கொடுக்கலாம் என வைத்திருந்துள்ளார். அப்போது மருமகள் வனவள்ளி வளர்த்து வந்த நாய் அந்த பிரசாதத்தை சாப்பிட்டதனால் மாமியார் மருமகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக மதுபோதையில் இருந்த மாமனார் சிவசாமி தனது மருமகள் வனவள்ளியை கடப்பாறையில் தலையில் அடித்ததுள்ளார். பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார் வனவள்ளி.
இத்தகவலின் பெயரில் பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேல், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வள்ளியின் மூத்த மகன் தேவராஜ் கொடுத்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மருமகளை கொலை செய்த மாமனார் சிவசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்