insta reels star thanga durai arrest 
க்ரைம்

17- வயது சிறுமியின் கனவை சிதைத்த காமுகன் - போக்ஸோ சட்டத்தில் சிறை செல்லும் "TN-15 கள்ளக்குறிச்சி பையன்"

இன்ஸ்டா ரிலீஸ் ஹீரோவை சிறையில் அடைத்த காவல்துறை ....

Anbarasan

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் தங்கதுரை பன்னிரண்டாவது வரை படித்துவிட்டு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுக்கொண்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார் இவருக்கும் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் TN-15கள்ளக்குறிச்சி பையன் என்ற இன்ஸ்டாகிராம் குரூப் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் முதலில் நட்பு ரீதியாக பழகி பின்பு காதலாக மாறியது.

இதனைத் தொடர்ந்து தங்கதுரையும் அந்த சிறுமியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது, இதில் தங்கதுரை அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் இந்நிலையில் தான் அந்த சிறுமிக்கு திடீரென காய்ச்சல் வாந்தி மயக்கம் தலை சுத்தல் ஏற்பட்டுள்ளது உடனடியாக சிறுமியை பெற்றோர்கள் அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமியை பரிசோதித்துப் பார்த்த போது சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது தெரிய வந்தது,

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு வீட்டுக்கு வந்த சிறுமி இன்ஸ்டா காதலன் தங்கதுரை இடம் அந்த 17-வயது சிறுமி செல்போனில் தொடர்பு கொண்டு இன்ஸ்ட்டா காதலன் தங்கதுரையிடம் நான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படியும் பலமுறை கூறி வந்ததாகவும் அதற்கு தங்கதுரை உன்னை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் உன்னைப் போன்று எத்தனையோ பெண்களிடம் நான் உல்லாசமாக இருந்திருக்கிறேன் அப்படி என்றால் எனக்கு இந்நேரம் பத்து கல்யாணம் நடந்திருக்க வேண்டுமென அசால்ட்டாக பேசியுள்ளார்.

இதனால் மனமுடைந்த 17-வயது சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்து விஷத்தை எடுத்துக் குடித்துள்ளார், இதனால் மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை அவரது குடும்பத்தினர் மற்றும் பக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி 17-வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் கரியாலூர் காவல் நிலையத்தில் அளித்த புகார் கொடுத்ததன் பேரில் காவல்துறையினர் இன்ஸ்டா காதலன் தங்கதுரையை போக்சோ சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்து கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் இன்ஸ்டா காதலன் தங்கதுரை கல்வராயன் மலைப்பகுதியில் பல்வேறு சிறுமி மற்றும் பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி பல பெண்களிடம் உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் காவல்துறையினர் இன்ஸ்டா காதலன் தங்கதுரையை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர் கல்வராயன் மலைப்பகுதியில் பல பெண்களிடம் instagram மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த இன்ஸ்டா ரீல்ஸ் ஹீரோ வாலிபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்