preethi and punith  
க்ரைம்

“ஒரு நாள் சாட்டிங் மறுநாள் டேட்டிங்” - காட்டுக்குள் அழைத்த காதலி.. கொலை செய்து நிலத்தில் வீசி சென்ற காதலன்!

முகநூல் பக்கத்தில் கே.ஆர் பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதான புனித் என்ற நபருக்கு மெசேஜ் செய்துள்ளார்

Mahalakshmi Somasundaram

கர்நாடக மாநிலம் ஹோசகொப்பலு பகுதியை சேர்ந்தவர் 38 வயதான ப்ரீத்தி இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ப்ரீத்தியின் கணவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். வீட்டில் குழந்தைகளை பார்த்துக் கொண்டு வேலைக்கு போகாமல் இருந்த ப்ரீத்தி சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடந்துள்ளார்.

இரவு வெகு நேரம் தூங்காமல் ப்ரீத்தி போன் பார்த்துக் கொண்டிருப்பார் என சொல்லப்படுகிறது. அதுபோல கடந்த (ஜூன் 19) தேதி இரவு போன் பார்த்துக்கொண்டிருந்த ப்ரீத்தி முகநூல் பக்கத்தில் கே.ஆர் பேட்டை பகுதியை சேர்ந்த 26 வயதான புனித் என்ற நபருக்கு மெசேஜ் செய்துள்ளார். அதை பார்த்த புனித்தும் ப்ரீத்திக்கு மெசேஜ் செய்துள்ளார்.

இருவரும் இரவு முழுவதும் மாறி மாறி மெசேஜ் செய்து கொண்டு செல்போன் எண்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். பின்னர் மறுநாள் காலை விடிந்ததும் இருவரும் போன் செய்து பேசி கொண்ட நிலையில் நேரில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்படி (ஜூன் 21) தேதி தோழி வீட்டிற்கு செல்கிறேன் என தனது கணவரிடம் கூறி விட்டு ப்ரீத்தி புனித்தை சந்திக்க சென்றுள்ளார்.

ப்ரீத்தியை சந்திக்க தனது நண்பரிடம் கார் வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளார் புனித். இருவரும் சுருதி நேரம் அதே பகுதியில் நின்று பேசிவிட்டு மைசூருக்கு காரில் சென்றுள்ளனர். அங்குள்ள சுற்றுலாத்தலங்களை எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு அறையெடுத்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இரவு நேரம் ஆகவே புனித் வீட்டிற்கு செல்லலாம் என ப்ரீதியிடம் கூற அதற்கு ப்ரீத்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.

புனித் ப்ரீத்தியை வற்புறுத்து அங்கிருந்து இருவரும் கிளம்பியுள்ளனர். புனித்தை விட்ட பிரிய மனமில்லாத ப்ரீத்தி வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு காட்டு பகுதிக்கு செல்லலாம் என புனித்திடம் கேட்டுள்ளார். அதற்கு புனித் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புனித் ப்ரீத்தியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். பின்னர் அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த ப்ரீத்தியின் உடலை காரில் எடுத்து சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை வீசி விட்டு சென்றுள்ளார். மனைவி வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த ப்ரீத்தியின் கணவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் ப்ரீத்தியின் செல்போன் சிங்னல்களை வைத்து புனித்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.