சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 30 வயதான ஹரி கிருஷ்ணன். இவர் அதே பகுதியில் பழைய இரும்பு மற்றும் மற்ற பொருட்களை சேகரித்து எடைக்கு போட்டு அதில் வரும் பணத்தில் தனது தாயுடன் வாழ்ந்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. இவருடன் சேர்ந்து இரும்புகளை சேகரிப்பவர் அதே பகுதியை சேர்ந்த பிரேம் குமார், ஹரி கிருஷ்ணனும் பிரேம்குமாரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கொடுங்கையூர் மதுபான கடையின் முன்பு ஒருவர் ரத்த காயங்களுடன் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர் இறந்து கிடப்பதை அறிந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார்.
விசாரணையில் இறந்தவர் ஹரி கிருஷ்ணன் என்பது தெரிவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார். ஹரி கிருஷ்ணன் இறந்த இடத்திற்கு அவரது நண்பர் பிரேம் குமார் வந்து சென்றதை தெரிந்துகொண்டு பிரேம்குமாரை கைது செய்துள்ளனர். பிரேம் குமாரிடம் மேற்கொண்ட விசாரணையில் பிரேம் குமார் ஹரி கிருஷ்ணனிடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார் அப்போது தன்னிடம் பணம் இல்லை என ஹரி பிரேமை தகாத வார்த்தைகளால் தீட்டியுள்ளார்.
எனவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளனர். இந்நிலையில் மது அருந்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஹரி கிருஷ்ணனை வழி மறித்த பிரேம் குமார் “எனக்கு கொடுக்க காசு இல்ல உனக்கு மட்டும் எப்படி காசு வந்துச்சு” என கேட்டு மீண்டு வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பிரேம் குமார் அங்கிருந்த கட்டையால் ஹரி கிருஷ்ணன் தலையில் அடித்து அவரை மயக்கம் அடைய செய்துள்ளார்.
இதனை அடுத்து கீழே விழுந்த ஹரி கிருஷ்ணன் மீது அங்கிருந்த கல்லை எடுத்து மார்பு பகுதியில் போட்டு கொலை செய்துள்ளார். மேலும் அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். என்பது தெரிவந்துள்ளது. ஒன்றை சுற்றி கொண்டிருந்த இருவரில் பிரேம் குமார் ஹரி கிருஷ்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.