க்ரைம்

காதலி வீட்டில் காதலன் தூக்கிட்டு தற்கொலை! நிச்சயிக்கப்பட்ட கல்யாணம் தள்ளி போனதன் பின்னணி.. பெண் வீட்டார் போட்ட ஷாக்கிங் கண்டிஷன்?

இந்நிலையில், நேற்று மாலை சுவேதா வீட்டுக்கு சென்ற தீபக் திருமணம் குறித்து பேசியதாக தெரிகிறது.

Muthu Lakshmi

திருவள்ளூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (61) விவசாயி. இவரது இளைய மகன் தீபக் (26), ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சுவேதா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறி, இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.காதலை வீட்டிற்க் தெரியப்படுத்தி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இவர்கள், வீட்டில் தெரிவித்துள்ளனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

தீபக் ஹிந்து மதத்தை சேர்ந்தவர், காதலி சுவேதா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். முதலில் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பெண்ணின் பெற்றோர், பின்னர் தீபக்கை கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதனால் திருமணம் தள்ளி போனதாக கூறப்படுகிறது. இதான் காரணமாக தீபக் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை சுவேதா வீட்டுக்கு சென்ற தீபக் திருமணம் குறித்து பேசியதாக தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டள்ளது. மன உளைச்சலில் இருந்த தீபக், சுவேதா வீட்டில் உள்ள படுக்கை அறையில் சென்று தாளிட்டு கொண்டுள்ளார்.

வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால், சுவேதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, தீபக், அரசியில் இருந்த ஷாலால் பேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டின் கதவை உடைத்து அவரை இறக்கி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர். அயப்பாக்கம் தீபக்கின் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். மேலும் இது குறித்து பெண்ணின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.