க்ரைம்

“இந்த குழந்தை எனக்கு தொல்லையா இருக்கு” - மூன்றாவது கணவருடன் சேர்ந்து மகளை கொன்ற தாய்.. காட்டில் சிதறிக்கிடந்த எலும்புகள்!

குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த கண்ணன் சிறுமியை சரமாரியாக அடித்து கழுத்தை நெரித்து...

Mahalakshmi Somasundaram

மதுரை மாவட்டம் செக்கானூரணி அடுத்துள்ள சொரிக்கான் பட்டியில் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த சந்திரன் என்பவரது கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் தென்காசியை சேர்ந்த கண்ணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கேரளா புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். கலாசூர்யாவிற்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடந்து கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் தான் கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

கலாசூர்யாவிற்கும் அவரது இரண்டாவது கணவரான அச்சு என்பவருக்கு பெண் குழந்தை உள்ள நிலையில் அந்த குழந்தையுடன் கலாசூர்யா கண்ணனுடன் வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மூன்று வயதான அந்த குழந்தை தற்போதைய தந்தையான கண்ணனிடம் பழக துவங்கிய நிலையில் சிவானி தனக்கு தொந்தரவாக இருப்பதாக அடிக்கடி கண்ணன் கூறி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் குழந்தை சிவானியை, வீட்டில் விட்டு விட்டு தாய் கலாசூர்யா கடைக்கு சென்றிருக்கிறார்.

அப்போது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த கண்ணன் சிறுமியை சரமாரியாக அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். கடைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய கலா சூர்யா இதனை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் சிறுமி உயிரிழந்தது யாருக்கும் தெரியக்கூடாது என கணவன் மனைவி இருவரும் சேர்ந்து குழந்தையின் உடலை அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வீசிவிட்டு வந்துள்ளனர்.

பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கலா சூர்யா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர்கள் சூர்யாவிடம் குழந்தை குறித்து கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார் இதனால் சந்தேகமடைந்த சூர்யாவின் தாய் சாந்தியை இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதன் அடிப்படையில் கேரளா போலீசார் மற்றும் செக்காணூரணி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெண் குழந்தையை கொன்று வீசியதை கண்ணன் மற்றும் கலா ஒப்புக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து கண்ணன் மற்றும் சூர்யாவின் உதவியுடன் போலீசார் சிறுமியின் உடலை வெறும் எலும்பு கூடுகளாக கைப்பற்றியுள்ளனர். கட்டு பகுதி என்பதால் குழந்தையின் உடலை காட்டு மிருகங்கள் உண்டு இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். 3 வயது சிறுமியை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொன்று காட்டில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.