devit raj Admin
க்ரைம்

“கொதித்தெழுந்த பெற்றோர்கள்”- 10 வயது சிறுமியிடம் போய் இப்படியா.. சிசிடிவி காட்சியால் கைதான “Swiggy”ஊழியர்!

காவல் நிலையத்தில் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், டேவிடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

Mahalakshmi Somasundaram

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி டேவிட் ராஜ், இவர் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து வருகிறார்.

அப்போது மதுரையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில், உள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய சென்ற போது, அந்த  குடியிருப்பு பகுதியில் நின்றுகொண்டிருந்த 10 வயது சிறுமியிடம் தவறாக செய்கைகளை காட்டி,பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபட முயற்சி செய்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பாதுகாத்து,டேவிட் ராஜை பற்றி போலீசில் புகாரளித்துள்ளனர். பிறகு சிறுமியின் வாக்குமூலம் படி வழக்கு பதிவு செய்த போலீசார், குடியிருப்பில் இருந்த சிசிடிவி கட்சிகளின் அடிப்படையில் டேவிட்டின் இருசக்கர பதிவு எண் வைத்து  போலீசார் டேவிடை கைதுசெய்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் இதுகுறித்து விசாரணை செய்த போலீசார், டேவிடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.மதுரை போக்ஸோ நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் படி, ஆண்டனி டேவிட் ராஜை சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்