பக்கத்து வீட்டுக்காரர் வளர்த்த கோய் வகை மீன்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக CCTV காட்சியில் பதிவான ஆதாரத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், "கர்ப்பிணி நாயிடமும் இதேபோன்ற செயலைச் செய்தேன்" என்று பதறவைக்கும் உண்மையை காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
51 வயதான சுத்திச்சாய் பூன்லெர்ட் என்ற நபர், தனது அண்டை வீட்டுக்காரரான பாபி அனோங்கின் குளத்தில் இருந்த, கோய் மீன் ஒன்றை சுய இன்பத்திற்காக பயன்படுத்தித் தாக்கியதாகக் குற்றசாட்டு சுமத்தப்பட்டது. தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், கடந்த செப்டம்பர் 7 அன்று, சுத்திச்சாய் ஆடைகள் இன்றி தண்ணீரில் இறங்கி இந்த சம்பவத்தை செய்ததாக பாதுகாப்பு கேமரா காட்சிகள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரை பார்க்கக்கூடாத சூழலில் பக்கத்து வீட்டுக்காரரான பாபி கண்டதும் ஆத்திரத்தில் சத்தமிட்டுள்ளார். அவரது சத்தினை கேட்டதும் சுத்திச்சாய் அவரது ஆடைகளை எடுத்துக்கொண்டு மிதிவண்டியில் தப்பி ஓடியுள்ளார். ஆனால், பாபி அவரை பிடிப்பதற்காக துரத்தி சென்றுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளான அந்த வீட்டு உரிமையாளர், பின்னர் இந்தச் சம்பவம் குறித்து துங் சோங் ஹாங் மாவட்டக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 10 அன்று, பாபியின் இல்லத்திற்கு அருகிலுள்ள சியாங் கோங் லாக் சி பகுதியில், சுத்திச்சாய் தப்பியோடியபோது அணிந்திருந்த அதே உடையை அணிந்தபடி நடந்து செல்வதை போலீசார் கண்டதால் அவரைக் கைது செய்துள்ளனர்.
அதிகாரிகளைக் கண்டதும் சுத்திச்சாய் தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனால் சிறிது நேரத் துரத்தலுக்குப் பிறகு விரைவாக போலீசாரிடம் பிடிபட்டார். பின்னர் அதிகாரிகள், சுத்திச்சாய் இது போன்ற சம்பவங்களில் இதற்கு முன்பு ஈடுபட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும் அதனை குற்றவாளியும் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், சுத்திச்சாய் மீது அத்துமீறி நுழைதல், சொத்துகளை சேதப்படுத்துதல், பொது அவமானத்தை ஏற்படுத்தும் செயல்கள் மற்றும் விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. குற்ற சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்தபோது சுத்திச்சாய், தான் குளத்தில் குளிக்க மட்டுமே எண்ணியிருந்ததாகவும், ஆனால் மீன்கள் தனக்கு அருகில் நீந்தியபோது உணர்ச்சிகள் ஏற்பட்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனக்கு காதலி யாரும் இல்லை என்றும், பாலியல் தொழிலாளர்களுக்குப் பணம் கொடுக்க வசதியில்லை என்றும், அதனால்தான் அந்த மீனுடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சமயத்தில் தான் போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பிணி நாய் ஒன்றிடம் இதுபோன்ற பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அப்போது பாங் கென் மாவட்டக் காவல்துறையினரால் கைது செய்யப்பதாகவும் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். கோபமடைந்த மீன் உரிமையாளர் பாபி, தான் சுமார் ஏழு முதல் எட்டு ஆண்டுகளாக கோய் மீன்களை வளர்த்து வருவதாகவும், அந்தக் காலகட்டத்தில் சுத்திச்சாய் தனது பண்ணை வாயிலுக்கு வெளியே உள்ள குளத்தில் அவ்வப்போது குளிப்பது வழக்கம் என்றும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சுத்திச்சாயை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று பாபி கூறியுள்ளார். தற்போது, இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது மதிப்புமிக்க மீன்கள் ஒவ்வொன்றாக இறக்கத் தொடங்கியதாலும், அவற்றின் உடல்கள் காயங்கள் மற்றும் முறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாலும் அவர் சந்தேகமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் CCTV காட்சிகளில் இந்த கொடூரத்தை கண்டுபிடித்ததாகவும் பாபி கவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக, தனது குளத்தைச் சுற்றி வேலி அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக பாபி உறுதிப்படுத்தியுள்ளார். தாய்லாந்தின் 2014-ம் ஆண்டு விலங்குகள் மீதான கொடுமையைத் தடுத்தல் மற்றும் நலவாழ்வுச் சட்டத்தின் கீழ், விலங்குகளைப் பாலியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது. மேலும், சுத்திச்சாயின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 40,000 பாட் வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்