தர்மபுரி மாவட்டம் கட்டம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அடுத்து தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மாலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலிப்பதாக கூறி அவருடன் பல முறை தனிமையில் இருந்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றியதால் மாலா கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே ஜாமீனில் வெளியே வந்த கோவிந்தசாமி அவரது சொந்த ஊரான தர்மபுரிக்கு சென்று அங்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும் சரிவர காவல் நிலையத்திற்கு வந்து கையொப்பமிடல் இருந்ததால் அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அந்தமானுக்கு தப்பித்து சென்றிருக்கிறார். பின்னர் அவ்வப்போது தனது மனைவியை பக்க தர்மபுரிக்கு வந்த போது மீண்டும் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜாமீனில் வந்த கோவிந்தசாமி மொத்தமாக முதல் மனைவியுடனான பேச்சு வார்த்தையை நிறுத்திவிட்டு அந்தமானுக்கு சென்று அங்கு கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார். கோவிந்தசாமியின் செல்போன் சிக்னலை வைத்து அவர் அந்தமானில் இருப்பதாய் அறிந்த தமிழ்நாடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து விமான மூலம் அந்தமானுக்கு விரைந்து கோவிந்தசாமியை கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் இரண்டு திருமணங்கள் செய்து வாழ்ந்து வந்தது தெரிவந்தது. மேலும் இந்த வழக்குகளை விசாரணை செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் கோவிந்தசாமிக்கு ஜாமீன் வழங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடந்து தற்போது கோவிந்தசாமி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.