வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் - ஆஷா தம்பதியினர். திருமணமாகி இவர்களுக்கு 6 வயதில் முகிலன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளான். இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பின் காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இரண்டு மாதமாக இருவரும் சேர்ந்து திருப்பூரில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் 6 வயது மகன் முகிலன் கடந்த 5 ஆண்டாக பேரணாம்பட்டு டி.டி. மேட்டூரில் உள்ள ஆஷாவின் தாய் விஜயா வீட்டில் விட்டு வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 40 நாட்களாக மேல்பட்டி ஆச்சாரி தெருவில் உள்ள முகிலனின் தந்தை ராஜேஷின் தாய் வீட்டில் பராமரிப்பில் விட்டுள்ளார்.
இன்று திடீரென சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறி வீட்டிற்கு குளிரூட்டும் பெட்டி (dead body Freezer box) வரவழைத்து வீட்டில் சடலமாக வைத்திருந்துள்ளனர். இதனை அறிந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மேல்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
உயிரிழந்த சிறுவன் முகிலன் ராஜேஷின் தாயார் விஜயாவின் (இவர் பெயரும் விஜயா) வீட்டில் இருந்ததே சிறுவன் உயிரிழந்த செய்திக்கு பின் தான் வெளியில் தெரியவந்துள்ளது என்றும், உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சிறுவனின் பாட்டி விஜயா மற்றும் இவரது மகள் ரேவதி மாத்திரீகம் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அருகில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். வீடு முழுவதும் மாத்திரீகம் தொடர்பான பொருட்கள், தெருவில் உள்ள பொது கிணற்றில் மாத்திரீக பொருட்களை வீசுவது போன்ற தொடர் செயலில் ஈடுபட்டதாகவும். இந்நிலையில் அமாவாசையான நேற்று பலி கொடுத்திருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
இது குறித்து உயிரிழந்த சிறுவனின் தாய் வழி பாட்டி விஜயா மற்றும் உறவினர்கள் கூறுகையில், “கடந்த 5 ஆண்டாக குழந்தையை சிறு கீரல் கூட படாமல் வளர்த்து வந்தோம். பிரிந்து வந்த எனது மகளோடு சேர்ந்து வாழ்வதாக கூறி குழந்தையை அழைத்துச் சென்றனர். எனது பேரனை நாங்க அனுப்ப மறுத்த போதும் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர். இடையில் பார்க்க கூட விடவில்லை போன் பண்ணா போனையும் எனது பேரனிடம் கொடுக்கவில்லை, இன்று மாலை போன் பண்ணி எனது பேரன் முகிலன் கீழே விழுந்து அடிபட்டு விட்டதாக கூறினர். நாங்க போய் பார்த்த போது வீட்டில் சடலமாக கிடத்தியிருந்தனர். தலை நசுங்கி, உடலில் காயங்கள் இருந்தது இதனால் எனது பேரனை அடித்து கொலை செய்திருப்பதாக நம்புகிறோம் இது குறித்து மேல் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். எனது மகளையும் எதாவது செய்து விடுவார்களா என பயமாக உள்ளது. எனது பேரனுக்கு இதய பிரச்சனை இருந்தது உண்மை தான் ஆனால் அதற்கு சிகிச்சை பார்த்து சரி செய்து விட்டோம் அவனுக்கு உடலில் எந்த பிரச்சனையும் இல்லை. சுவர் மீது ஏறி கீழே விழுந்ததில் இறந்து விட்டதாக கூறுகிறார்கள் அதில் உண்மை இல்லை. ஆகவே எனது பேரனை அடித்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் மந்திரீகம் செய்பவர்கள் இன்று அம்மாவாசை என்பதால் பலி கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றோம் ஆகவே இது குறித்தும் காவல் துறை விசாரித்து நடவடிக்கை வேண்டும்” கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக குற்றச்சாட்டுக்குள்ளான விஜயாவின் மூத்த மகள் ரேவதி என்பரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆறு வயது சிறுவன் தனது பாட்டி மற்றும் சொந்த அத்தை மூலம் மர்மமான முறையில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.