நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதுடைய சிவபாலன். இவர் அதே பகுதியில் கூட்டுறவு கடன் சங்கத்தின் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். சிவபாலன் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய காவ்யா என்ற பெண்ணை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த சில வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருவரும் சிவபாலன் வீட்டில் வசித்து வந்த நிலையில் தொடக்கத்தில் காவ்யாவை நன்றாக பார்த்து கொண்ட மாமியார் மாமனார் இருவரும் பின்னர் அவரை கொடுமை செய்துள்ளனர்.
காவ்யாவின் மாமியார் செந்தமிழ்ச்செல்வி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் அனைத்து வேலைகளையும் காவ்யா மட்டுமே செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மாமனார் பழனித்துறை ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. காவ்யா பிடிக்காத மாமியார் மற்றும் மாமனார் தினத்தோறும் மருமகளிடம் சண்டையிட்டு கொடுமை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காவ்யாவுக்கு குழந்தை பிறந்த நிலையில் குழந்தையை பார்த்துக் கொண்டு வீட்டு வேலை செய்ய முடியாமல் காவ்யா அவதிப்பட்ட நிலையில் குழந்தை பார்த்துக் கொள்ளுமாறு மாமியாரை கேட்டிருக்கிறார்.
இதனால் மாமியார் மற்றும் மருமகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவியாவை அவரது மாமியார் சரமாரியாக திட்டியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து குடித்துவிட்டு வரும் மாமனாரும் தொடர்ந்து காவ்யாவை டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். எனவே சிவபாலன் காவ்யாவை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில் வேலைக்காக சிங்கப்பூர் சென்று சிறிது நாட்களில் நாடு கடத்தியதால் அங்கிருந்து மீண்டும் இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இதற்கும் சேர்த்து வைத்து மாமியார் காவ்யாவை கடுமையாக திட்டியுள்ளார்.
எனவே மிகுந்த மன உளைச்சலில் இருந்த காவ்யா நேற்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது தற்கொலை மாமியார் மாமனார் மட்டுமே முழுக்க முழுக்க காரணம் என அவர்கள் செய்த கொடுமைகளை பட்டியலிட்டு வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பின்னர் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு தனது ஆறு மாத குழந்தையை துப்பட்டாவை பண்படுத்தி இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காலையில் காவ்யாவின் பெற்றோர்கள் மாற்று அவரது உறவினர்கள் அவரை தேடி நிலையில் கிணற்றில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாய்மேடு போலீசார் உடனடியாக தீயணைப்பு துறையினர் உதவியுடன் இரண்டு உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை ம் மேற்கொண்ட நிலையில் போது காவ்யா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைத்து அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த மாமனார் மாமியார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது மாமியார் செந்தமிழ்ச் செல்வியை கைது செய்த நிலையில் மாமனார் பழனி துறையை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.