தமிழக வெற்றி கழகத்தின் நாமக்கல் மாவட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் 47 வயதுடைய செந்தில்நாதன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் நாமக்கல் கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள பெண் நிர்வாகி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து அவ்வப்போது இருவரும் தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த (டிச 18) ஆம் தேதி ஈரோட்டில் நடந்த தமிழக வெற்றி கழகத்தில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பெண் நிர்வாகி வீடு திரும்பியுள்ளார். அதே போல் கூட்டத்தில் கலந்து கொண்ட செந்தில் நாதன் கூட்டத்தை முடித்து விட்டு அவரது வீட்டிற்கு செல்லாமல் பெண் நிர்வாகியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனை பார்த்த பெண்ணின் உறவினர்கள் மாற்று அக்கம் பக்கத்தினர் அறையின் கதவை தட்டியுள்ளனர்.
வெகு நேரம் கதவை தட்டியும் இருவரும் கதவை திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு செந்தில்நாதன் அரைகுறை ஆடையுடன் பெண்ணுடன் உல்லாசத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் பெண்ணையும் செந்தில் நாதனையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் பெண்ணின் உறவினர்கள் செந்தில்நாதனை பிடித்து வைத்திருந்துள்ளனர். தகவலறிந்து சென்ற தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் செந்தில்நாதனை மீட்டு அழைத்து வந்தனர்.
பெண்ணின் வீட்டில் செந்தில்நாதன் அரைகுறை ஆடையுடன் இருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் கட்சியின் நிர்வாகிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். அதை தொடர்ந்து நேற்று செந்தில்நாதன் ஒன்றிய செயலாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். தவெக நிர்வாகி பெண்ணுடன் தவறான உறவில் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.