திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சீரகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி செல்வம். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவந்துள்ளார். சீரகம்பட்டியில் உள்ள பள்ளி மாணவிகளை அப்பகுதியில் இருந்து நிலக்கோட்டையில் உள்ள பள்ளிக்கு அழைத்து செல்வதை மணி வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் ஆட்டோவில் மாணவிகளை அழைத்து செல்லும் போது செங்கோட்டையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மாணவிகளை கிண்டல் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.
இதனால் அவதிப்பட்டு வந்த மாணவிகள் இளைஞர்கள் தொல்லை தாங்க முடியாமல் இது குறித்து ஆட்டோ டிரைவர் மணியிடம் மாணவிகள் தெரிவித்துள்ளனர். எனவே மணி இது குறித்து இளைஞர்களிடம் விசாரித்தபோது அவர்கள் தேவையற்றை வார்த்தைகளை பேசியுள்ளனர். இதனால் மணிக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து விலகி அனுப்பியுள்ளனர்.
இதனை தொடர்ந்து மறுனாலும் சென்று அவுட்டோவை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மணி அவர்களிடம் வாக்குதவாதம் செய்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் ஆட்டோ ஓட்டுநர் மணியை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் மணி அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று இளைஞர்கள் மீது புகாரளித்துள்ளார். புகாரளித்து இரண்டு நாட்கள் ஆகியும் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இளைஞர்கள் மணியை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் இளைஞர்கள் விரைவாக கைது செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.