"உணவு கொண்டு வந்ததால் ஏற்பட்ட உறவு" - நண்பனின் மனைவியுடன் போய்.. கல்குவாரியில் கேட்ட அலறல் சத்தம்!

இந்நிலையில் யோகேஷ் ராஜேஷின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மெசேஜ் செய்துள்ளார்.
rajesh and yokesh
rajesh and yokesh
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள  டி.மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான யேகேஷ்வரன். இவர் வாடிப்பட்டி அருகே உள்ள கல்குவாரியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். அதே கல்குவாரியில் ஜேசிபி ஓட்டுநராக வேலை செய்து வந்தவர் கோணப்பட்டி பகுதியை சேர்ந்த 35 வயதான ராஜேஷ் இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளது.

ராஜேஷும், யோகேஸ்வரனும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். எனவே ராஜேஷின் மனைவி கல்குவாரிக்கு உணவு கொண்டு வரும்போதும், ராஜேஷை பார்க்க வந்து செல்லும் போதும் யோகேஸ்வரனிடம் கணவரின் நண்பர் என்ற முறையில் நலம் விசாரித்துள்ளார். இந்நிலையில் யோகேஷ் ராஜேஷின் மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மெசேஜ் செய்துள்ளார். பின்னர் இருவரும் பழகி வந்த நிலையில் அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. 

Admin

நண்பனும் மனைவியும் தவறாக பழகி வந்ததை தெரிந்து கொண்ட ராஜேஷ், இருவரையும் அழைத்து கண்டித்திருக்கிறார். அப்போது ராஜேஷுக்கும் யோகேஸ்வரனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பிவைத்திருக்கின்றனர். ஆனால் யோகேஸ்வரன் தனது தகாத உறவை விடாமல் ராஜேஷின் மனைவியுடன் பழகி வந்துள்ளார்.

yokesh
yokesh

இந்நிலையில் இன்று அதிகாலையில் ராஜேஷ் கல் குவாரிக்கு வேலைக்கு வந்த போது யோகேஷ் தனது மனைவியுடன் தகாத உறவில் இருப்பதை பற்றி மீண்டும்  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜேஷ் அருகில் இருந்த கட்டையை எடுத்து யோகேஷை தலையில் பலமாக தாக்கியிருக்கிறார். இதனால்  பலத்த காயம் அடைந்த யோகேஷ் அலறி துடித்து  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

Admin

பின்னர் குவாரிக்கு வேலை செய்ய வந்தவர்கள் யோகேஷின் உடலை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் யோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பாலமேட்டில் பதுக்கி இருந்த ராஜேஷை கைது செய்துள்ளனர். தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்தவர் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com