க்ரைம்

“கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஒன்றரை வயது குழந்தை கொலை” - விஷம் கொடுத்து கொன்று நாடகமாடிய தாய்.. சேலத்தில் பரபரப்பு!

வீட்டில் குழந்தையை விட்டு விட்டு வெளியில் செல்வதால் லலிதாவை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திட்டயதாக சொல்லப்படுகிறது.

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவருக்கும் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த 21 வயதுடைய லலிதா என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஐந்து வயதில் ஹர்சன் ராஜ் மற்றும் ஒன்றரை வயதில் புவன்ராஜ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே லலிதா அவரது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சிறுவாச்சூர் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

பின்னர் இரண்டு குடும்பங்களும் தம்பதியை சேர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் லலிதா சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்திருக்கிறார். எனவே வாசுதேவன் தனது ஐந்து வயது மகனை தான் வளர்ப்பதாக அழைத்து சென்றிருக்கிறார். பின்னர் லலிதா தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வரும் நிலையில் மேஸ்திரி வேலைக்கு சென்றிருக்கிறார். அப்போது லலிதாவிற்கு தன்னுடன் வேலை பார்க்கும் ஆனந்தன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்த வந்ததாக சொல்லப்படுகிறது. வீட்டில் குழந்தையை விட்டு விட்டு வெளியில் செல்வதால் லலிதாவை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திட்டயதாக சொல்லப்படுகிறது. இதனால் தனது கள்ளக்காதலுடன் சந்தோஷமாக இருக்க முடியாமல் அவரது குழந்தை புவன்ராஜ் இடையூறாக இருப்பதாக கருதிய லலிதா கடந்த ஏப்ரல் மாதம் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் வலிப்பு வந்ததாக கூறி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு சிகிச்சை பெற்ற வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

பின்னர் குழந்தையின் இறப்பில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் அருந்தி குழந்தை இறந்துள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவர்கள் தலைவாசல் போலீசருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து அறிந்த லலிதா தலைமறைவாகியுள்ளார். எனவே காவல் ஆய்வாளர் பூர்ணிமா தலைமையில் லலிதாவை கைது செய்ய தனிப்படை அமைத்து அமைக்கப்பட்டது.

தனிப்படையின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு லலிதாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் தனது சந்தோஷத்திற்கு குழந்தை இடையூறாக இருப்பதாகவும் இதனால் சாப்பாட்டில் விஷம் வைத்து வலிப்பு வந்ததாக நாடகம் ஆடியதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஒன்றரை வயது குழந்தையை பெற்ற தாயே விஷம் வைத்து கொலை செய்து நாடகம் ஆடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.