Admin
க்ரைம்

“9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை” - சொந்த மகளை பலமுறை சீரழித்த கொடூரம்… நீலகிரியில் பரபரப்பு!

தந்தை என்பதால் அதை வெளியில் கூற முடியாமல் மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது...

Mahalakshmi Somasundaram

நீலகிரி மாவட்டம் உதகை பகுதியை சேர்ந்தவர் முரளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் அதே பகுதியில் கூலி தொழில் செய்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பக்கத்து கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் முரளிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருது வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முரளியின் மனைவி மகள்களை கணவனிடம் விட்டு விட்டு பிரிந்து சென்று தனியாக வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

குடும்ப பிரச்னை காரணமாக சிறுமிகள் சிறு வயதிலேயே தாயார் பிரிந்து சென்றதால், இருவரும் தந்தையுடன் வசித்து வந்த நிலையில் தற்போது முத்த மகள் பன்னிரண்டாம் வகுப்பும், இரண்டாவது மகள் ஒன்பதாவது வகுப்பும் படித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு கடந்த சில நாட்களாக தந்தை பாலியல் தொல்லை அளித்து வந்ததாகவும், தந்தை என்பதால் அதை வெளியில் கூற முடியாமல் மாணவி மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

புதன்கிழமை இரவு மது அருந்தி வீடு திரும்பிய தந்தை, மாணவிக்கு மீண்டும் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமையாலும் தந்தையே அதை செய்வதாலும் கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி, நேற்று (பிப் 20) வியாழக்கிழமை வீட்டில் இருந்த தோட்டப் பயன்பாட்டுக்கான பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு செல்லும் வழியில் யாருக்கும் தெரியாமல் குடித்து விட்டு பள்ளிக்கு சென்றிருக்கிறார். பின்னர் பள்ளிக்குச் சென்ற அவர், வகுப்பு ஆரமித்த சிறுது நேரத்தில் அங்கு மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்த சக மாணவிகள் அரை மயக்கத்தில் இருந்த அவரிடம் என்ன நடந்தது என கேட்டபோது தந்தை பாலியல் தொல்லை அளித்ததால் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக குழந்தைகள் நலத் துறையினருக்கு தகவல் அளித்து, மாணவியை மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவியின் உடல்நிலை மோசமடைந்ததால், மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, உதகை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான மாணவியின் தந்தையை தீவிரமாகத் தேடி வருகின்றனர். சொந்த தந்தையே மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.