“7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை” - இரண்டு நாட்களுக்கு பிறகு டிரம்மில் மீட்கப்பட்ட அழுகிய உடல்.. எதிர் வீட்டு வாலிபர் செய்த கொடூரம்!

சிறுமிக்கு கிடைத்த நீதியாக நினைத்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்...
“7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை” - இரண்டு நாட்களுக்கு பிறகு டிரம்மில் மீட்கப்பட்ட அழுகிய உடல்.. எதிர் வீட்டு வாலிபர் செய்த கொடூரம்!
Published on
Updated on
2 min read

ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி அடுத்துள்ள நீருகட்டுவரிபள்ளி பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய குலவர்தன். இவர் படித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமலே நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்த நிலையில் அவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வந்த 7 வயதுடைய சிறுமியை கடந்த (ஜன 16) திங்கட்கிழமை அன்று யாருக்கும் தெரியாமல் அவரது வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்று வீட்டில் இருந்த தண்ணீர் நிரப்பி வைக்கும் ட்ராமில் உடலை போட்டு மறைத்து வைத்துவிட்டு தலைமைறைவாகியுள்ளார்.

வீதியில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என தேடிய சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இது குறித்து போலீசில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை தேடி வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பரிசோதித்த போது சிறுமி குலவர்தனுடன் சென்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் குலவர்தனிடம் விசாரணை மேற்கொள்ள அவரை தேடிய நிலையில் அவர் தலைமறைவானது தெரிய வந்தது.

எனவே குலவர்தன் வீட்டை பரிசோதித்த போது வீட்டில் இருந்த தண்ணீர் ட்ராமில் சிறுமியின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. தொடர்ந்து சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார் குலவர்தனை தேடி கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. எனவே குலவர்தனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் நிலையத்தில் வைத்திருந்தனர்.

அப்போது காவல் நிலையத்தில் இருந்து குலவர்தான் தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் குலவர்தன் உயிரிழந்த நிலையில் ஆற்றில் உடல் மிதப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் குலவர்தன் தண்டனைக்கு பயந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற வாலிபர் உயிரிழந்த சம்பவத்தை அப்பகுதி மக்கள் சிறுமிக்கு கிடைத்த நீதியாக நினைத்து பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com