செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த முதுகரை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்து வரும் மாணவி அஸ்வினி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாணவியின் தந்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனை அடுத்து மனைவியின் தாய் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் மாணவி தனது தாய் மற்றும் முருகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். முருகனின் சம்பளத்தில் குடும்பம் நடத்த முடியாமல் ஏழ்மையில் இருந்த மாணவியின் தாய் முருகனுடன் சேர்ந்து கொடூர திட்டம் ஒன்று தீட்டியுள்ளார்.
மாணவியின் தாய் மற்றும் முருகன் இருவரும் சேர்ந்து மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த மாணவியை பல ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும் மாணவி இந்த செயல் பிடிக்காததால் உடல்நிலையை காரணம் காட்டி மறுத்த போது மாணவியை அடித்து அவரது தாய் மற்றும் முருகன் பலருக்கு மாணவியை இரையாக்கியுள்ளனர்.
பெரும்பாலும் 40 வயதிற்கு மேல் இருக்கும் ஆண்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற மகளை வைத்து மாணவியின் தாய் பேரம் பேசி அவர்கள் சொல்லும் இடத்திற்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சல் அடைந்த மாணவி தனக்கு தனது பெற்றோர்களால் நடந்து வரும் கொடுமைகளை பற்றி தனது பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இது குறித்து மேல் மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
தகவல் அறிந்து மாணவி வீட்டிற்கு சென்ற அனைத்து மகளிர் காவல் துறையினர் மனைவியிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் இதுவரை 40 மேற்பட்ட ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதும், வளர்ப்பு தந்தையான முருகனும் அடிக்கடி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவியின் தாய், வளர்ப்பு தந்தை முருகன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த செல்வம் என மூவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.