
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த புட்லூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் 29 வயதான அரவிந்த். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான்சி என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அரவிந்த் மற்றும் ஜான்சி தம்பதிக்கு நான்கு வயதில் சாரிகா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் அர்விந்த் மதுபான கடைகளில் லோடு ஏற்றி இறக்கும் வேலை செய்து வந்துள்ளார். இதனால் அரவிந்த் குடி பழக்கத்திற்கு அடிமையாக தினம் தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் அரவிந்தனுக்கு பால்ராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது, பால்ராஜ் அரவிந்துக்கு உஷா என்ற ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்துள்ளார், அரவிந்தும் உஷாவும் நட்பாக பழகி வந்த நிலையில் இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. உஷா பணத்திற்காக ஆண்களிடம் பழகுபவர் என சொல்லப்படுகிறது, எனவே அரவிந்தும் உஷாவும் அடிக்கடி தனிமையில் இருந்தது வந்ததாக தெரிவிக்கின்றனர். உஷாவிற்கு உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மாதவிடாய் காலங்களிலும் கூட தன்னுடன் தனிமையில் இருக்க சொல்லி அரவிந்த் உஷாவை வற்புறுத்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்திற்கு மேல் அரவிந்தின் சித்ரவதையை பொறுத்துக்கொள்ள முடியாத உஷா இதுகுறித்து அரவிந்தை தனக்கு அறிமுகம் செய்து வைத்த பால்ராஜிடம் தெரிவித்துள்ளார். பால்ராஜ் அரவிந்தை அழைத்து கண்டித்துள்ளார், இருப்பினும் அதை பொருட்படுத்தாத அரவிந்த தொடர்ந்து உஷாவை தனிமையில் இருக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த உஷா மற்றும் பால்ராஜ் அரவிந்தை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி கடந்த (ஜூன் 19) தேதி வேலை முடித்து விட்டு குடிபோதையில் வீட்டுக்கு திரும்பிய அரவிந்தை வழிமறித்து பால்ராஜ் அவரை ரயில் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு காத்திருந்த கூலிப்படையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் அரவிந்தை சரமாரியாக வெட்டி விட்டு உடலை தண்டவாளத்தில் வீசி விபத்து போல சித்தரித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அரவிந்தின் உடலை பார்த்து ரயில் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ஆய்வு நடத்தியுள்ளனர். இதற்கிடையே அரவிந்தின் மனைவி ஜான்சி வேலைக்கு சென்ற தனது கணவரை காணவில்லை என புகாரளித்துள்ளார். சந்தேகத்தின் அடிப்படையில் உடலை பார்க்க ஜான்சி வரவழைக்கப்பட்ட நிலையில் இறந்தது தனது கணவர் என ஜான்சி உறுதிப்படுத்திய நிலையில், அரவிந்தின் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அரவிந்தின் இறப்பை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 45 நாட்களுக்கு பிறகு வந்த பிரேத பரிசோதனையின் முடிவில், அரவிந்தன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க தொடங்கிய போலீசார் அரவிந்தின் கால் ஹிஸ்டரியை வைத்து உஷாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் முன்னுக்கு பின் பதிலளித்த உஷா பின்னர் தானும் தனது நண்பரும் சேர்ந்து தான் அரவிந்தை கொலை செய்தோம் என ஒப்புக் கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து உஷா மற்றும் கூலிப்படையை சேர்ந்த இரண்டு சிறுவர்களை கைது செய்த போலீசார் தப்பி சென்ற பால்ராஜை தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.