திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி லாரி சேட் பகுதியைச் சேர்ந்த காளி பிரவீனா தம்பதியினர். இவர்களின் மகள் திவ்யதர்ஷினி (19). இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள இன்ஜினியரிங் காலேஜ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் பெருமாள் (23). இவர் அதே பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார்.
இந்த இரண்டு பேரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரத்தை அறிந்த திவ்யதர்ஷினியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த காதல் ஜோடி கடந்த சனிக்கிழமை அன்று வீட்டை விட்டு வெளியேறி ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் (ஜூலை 05) திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும், திருமணம் செய்த கையோடு பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று (ஜூலை 06) தஞ்சமடைந்துள்ளனர்.
பின்னர் காதல் ஜோடி காவல் நிலையம் வந்துள்ளதாக போலீசார் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையறிந்து காவல் நிலையம் பெற்றோர்கள், திவ்யதர்ஷினியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சமாதானப்படுத்திக் கொண்டிருந்தபோது போலீசார் முன்னிலையிலேயே திவ்யதர்சனியின் காலை பிடித்து தாய் தந்தை இருவரும் கத்தி கதறி அழுதுள்ளனர்.
இதனால் காவல்துறையில் சலசலப்பு ஏற்பட்டதன் காரணமாக போலீசார் பெற்றோர்களை காவல் நிலையத்தை விட்டு வெளியே அப்புறப்படுத்த நினைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையம் முன்பு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். "எங்கள் மகளுடன் பேச விடுங்கள்" என்றும் "எங்களுடன் வீட்டிற்கு வந்து விடு" என்று அவர்கள் தங்கள் மகளிடம் கதறி அழுதனர். ஆனால், திவ்யதர்ஷினி அவர்களை உதறி விட்டு தன்னுடைய காதலன் அருகில் சென்று நின்று கொண்டார். இதனால், காவல்நிலையத்தின் வெளியே உள்ள சாலையில் திடீரென உருண்டு பிரண்டு கத்தி கதறி பெற்றோர் அழுதனர்.
இதன் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதுகுறித்து திவ்யதர்ஷினியின் தந்தையான காளி செய்தியாளர்களைசந்தித்தார். மேலும், அவர் பேசுகையில் பெருமாளுக்கு அதிக பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது என்றும், மேலும் இரண்டு தினங்களுக்கு முன்பு மற்றொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதையும் நானே பார்த்தேன் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி ஊரில் பெருமாள் பற்றி கேட்கும் போது ஒருவர் கூட பெருமாளை நல்லவன் என்று சொல்லவில்லை என்றும் கூறினார். மேலும், "எனது மகளை தயவுசெய்து மீட்டுத் என்னுடன் அனுப்புங்கள். இது திருமணம் செய்ய சரியான வயது இல்லை. இன்னும் என் மகளுக்கு 2 ஆண்டுகள் படிப்பு உள்ளது. அவன் நல்லவனாக இருந்தால் நானே திருமணம் செய்து வைப்பேன். அனால் அவன் பொம்பள பொறுக்கி" என்று கூறி கதறி அழுது பேட்டி கொடுத்து சம்பவம் அனைவரையும் கண்கலங்க செய்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.