முதல் மனைவி இருப்பதை ஏமாற்றி மைனர் பெண்ணை திருமணம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை விதித்து உத்தரவிட்டுள்ளது திருவண்ணாமலை மகளிர் விரைவு நீதிமன்றம்
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் தண்டரை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி விழுப்புரம் மாவட்டம் மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த விமலா. மணிகண்டன் கடந்த 2018 - ம் ஆண்டு தந்து மனைவி விமலாவிற்கு தெரியாமல் மைனர் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அந்த மைனர் பெண்ணிடமும் தனக்கு திருமணத்தை மறைத்துள்ளார். அதையடுத்து ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மைனர் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரின் மனைவி விமலா வெறையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். மணிகண்டன் மைனர் பெண்ணை திருமணம் செய்துள்ளதால் இந்த புகார் தண்டராம்பட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தாமோதரன் தீர்ப்பு வழங்கியுள்ளார். போக்சோ வழக்கில் கைதான மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.