க்ரைம்

“என்ன கேள்வி கேட்க நீ யாரு” - கருத்து வேறுபாட்டில் தொடங்கிய பிரச்சனை.. விசிக பிரமுகரை கொலை செய்த 10 பேர் கொண்ட கும்பல்!

எனவே மறுநாள் வரை காத்திருந்த சுமன் தனது நண்பருடன் டீ கடைக்கு இருசக்கர வாகனத்தில்

Mahalakshmi Somasundaram

திருவண்ணாமலை அடுத்த சொரகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ்  இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்துள்ளார். அதே கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருப்பவர் சுமன், இவரும் சொரகுளத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சுமனுக்கும் காமராஜுக்கும் இடையே கட்சி மற்றும் ஆதரவாளர்கள் தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே இது விரோதமாக வளர்ந்துள்ளது. சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்பு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் வசை பாடியுள்ளனர்.

பின்னர் வழக்கம் போல் காமராஜ் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் சுமன் காமராஜர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். எனவே மறுநாள் வரை காத்திருந்த சுமன் தனது நண்பருடன் டீ கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காமராஜரை தனது நண்பர்கள் ஒன்பது பேருடன் சென்று வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.  

அப்போது சுமன் “என்ன கேள்வி கேட்க நீ யாரு”  என கேள்வி கேட்டு அவரது நண்பர்களுடன் சேர்ந்து  காமராஜரை கற்கள் மற்றும் அங்கிருந்த இரும்பு கம்பிகளை வைத்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காமராஜரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயனளிக்காததால் காமராஜரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட காமராஜர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் காமராஜரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் காமராஜரை தாக்கி விட்டு தப்பி சென்ற சுமன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். சாலையில் வைத்து விசிக பிரமுகர் கற்களால் தக்கபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.