Pregnant woman's body in suitcase 
க்ரைம்

“சூட்கேசில் கர்ப்பிணியின் சடலம்” - நேபாளத்திலிருந்து தெலுங்கானாவிற்கு அழைத்து வந்த காதலன்.. கருவை கலைக்க மறுத்து உயிரிழந்த காதலி!

தரவின் உடலை அவர் வாங்கிய சூட்கேசில் போட்டு அதை காட்டு பகுதிக்கு எடுத்துச் சென்று வீசிவிட்டு தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்” என்பது தெரியவந்துள்ளது.

Mahalakshmi Somasundaram

ஹைதராபாத் மாவட்டம்  பௌரம்பேட்டை என்ற கிராமத்தில் உள்ள ஒரு காட்டு பகுதியில் இருந்த சூட் கேசில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதை கவனித்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதுகுறித்து போலீசில் தகவலாளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சூட்கேசை திறந்து பார்த்த போது அதில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை வைத்து சூட்கேசை வீசி சென்ற விஜய் தோப்ரா இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், விஜய் தான் அந்த கொலையை செய்தார் என்பதும் அவரும் அந்த பெண்ணும் ஒன்றாக ஹைதராபாத்தில் வீடு எடுத்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

விஜய் அளித்த வாக்குமூலத்தின் படி “நேபாளம் பகுதியை சேர்ந்த தாரா என்ற 33 வயதான பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த விஜயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நேபாளத்தில் இருந்து ஹைதராபாத் பகுதிக்கு குடிபெயர்ந்து  வீடு எடுத்து  பக்கத்தில் உள்ள பாஸ்ட் புட்  கடையில் வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பமடைந்த  தாரா தனது கர்ப்பத்தை பற்றி விஜயிடம்  கூறியுள்ளார். அதற்கு விஜய் இப்போது குழந்தை வேண்டாம் கலைத்து விடு என கூற அதற்கு தாரா மறுத்ததால் விஜய் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இந்த திட்டத்தின் படி கடைக்கு சென்று சூட்கேசை வாங்கிய விஜய் வீட்டிற்கு வந்து தாராவிடம் மீண்டும் ஒரு முறை கருவை கலைக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

அப்போதும் தாரா அதனை மறுக்கவே அவரை கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்த விஜய். தரவின் உடலை அவர் வாங்கிய சூட்கேசில் போட்டு அதை காட்டு பகுதிக்கு எடுத்துச் சென்று வீசிவிட்டு தனது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்” என்பது தெரியவந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் இருந்து பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.