
உத்திரப்பிரதேசம் மீரட் பகுதியில் உள்ள கால்வாயில் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்ட ஒரு அடையாளம் தெரியாத பெண்ணின் தலை கிடந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசுக்கு தகவலாளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சிறிது நேரத்தில் தலை கிடைத்த அதே பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் ஒரு உடல் முழுவதும் கத்தியால் குத்தப்பட்டு தலையில்லாமல் கிடைத்துள்ளது. உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையில் தலையும் உடலும் ஒரே பெண்ணினுடையது என்றும் அவருக்கு 19 வயது இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசார். பெண்ணின் உடையில் இருந்த ஒரு துண்டு சீட்டை வைத்து உயிரிழந்தவர். மீரட் பகுதியை சேர்ந்த தன்ஷிகா என்ற 19 வயது பெண் என்பதும், இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்ததையும் கண்டுபிடித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விசாரணையில் உயிரிழந்த தன்ஷிகாவின் தாயே அவரை கொலை செய்ததும் அதற்கு தன்ஷிகாவின் மாமாக்களும் அவரது அண்ணனும் துணையாக இருந்ததும் தெரியவந்ததுள்ளது. தன்ஷிகா அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த தன்ஷிகாவின் தாய் தேவி அவரை கண்டித்துள்ளார். ஆனாலும் தன்ஷிகா அவரது காதலை கைவிடாமல் இருந்துள்ளார்.
காதல் என்றால் சுத்தமாக பிடிக்காத தேவி, தன்ஷிகாவின் இந்த செயலால் கடும் ஆத்திரம்அடைந்துள்ளார். இதனால் தன்ஷிகாவை கொலை செய்ய முடிவு செய்து அவரது சகோதரர்கள் இடமும் தனது மகனிடமும், தன்ஷிகாவை கொலை செய்ய உதவி கேட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதிய நேரம் தனது அறையில் அமர்ந்து தனது காதலனுடன் போன் பேசி கொண்டிருந்த தன்ஷிகாவை, தேவி இரும்பு கம்பியால் அடித்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தன்ஷிகா உயிரிழந்தது யாருக்கும் தெரியக்கூடாது என எண்ணிய தேவி. இரவு நேரம் ஆகும் வரை காத்திருந்து தன்ஷிகாவின் தலையையும் உடலையும் தனித்தனியாக வெட்டி எடுத்து ஒரு வெள்ளை துணியால் உடல் மற்றும் தலையை சுற்றி. சகோதரர்கள் மற்றும் மகனின் உதவியுடன் தலை மற்றும் உடலை காரில் எடுத்து சென்று ஒரு கால்வாய் பகுதியில் தலையையும் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்த சாலையில் உடலையும் வீசி சென்றுள்ளார் என்பது போலீசார் விசாரணையின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலையில் வாக்குமூலம் அளித்த தேவியையும் அவரது மகன் மற்றும் சகோதரர்களை கைது செய்த போலீசார், நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பெற்று வளர்த்த தாய் தனது மகளை கொலை செய்து கால்வாயில் வீசியது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.