“நீ வேணான்னு சொல்லிட்ட” - யாரை திருமணம் செய்தால் உனக்கு என்ன? காதலுக்காக கொலை செய்யப்பட்ட உயிர் நண்பன்!

தர்ஷனை மது அருந்த ஊருக்கு ஒதுக்கு புறமாக அழைத்துச் சென்றுள்ளார்
dharshan and venu gopal
dharshan and venu gopal
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் கோலஹல்லி பகுதியை சேர்ந்தவர் 24 வயதான வேணுகோபால். இவர் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான பவித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பவித்ரா வேணுகோபாலை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.

அதே சமயம் வேணுகோபாலின் நெருங்கிய நண்பரான தர்ஷனுக்கும் பவித்ராவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே இருந்த நட்பு காதலாக மாறி காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள். பின்னர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர்.

தர்ஷனுக்கு திருமணம் உறுதியாகும் வரையிலும், தர்ஷனும் பவித்ராவும் காதலித்து வருவது வேணுகோபாலுக்கு தெரியாது என சொல்லப்படுகிறது.தான் காதலித்த பெண்ணை நண்பர் காதலித்து திருமணம் செய்து கொள்ள போகிறார். என்று அறிந்து தர்ஷன் மீது ஆத்திரம் அடைந்த வேணுகோபால் அவரை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார் .

தர்ஷனை தாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வர சொன்ன வேணுகோபால்  அவரிடம் “ நானும் அவளும் லவ் பண்ணது உனக்கு நல்லாவே தெரியும். அப்படி இருந்து நீ ஏன் அவளை லவ் பண்ண எங்களுக்கு எப்போதும் போல தான் சண்டை வந்தது. நடுவுல நீ வந்ததால தான் அவ என்னை வேணான்னு சொல்லிட்ட ” என கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த தர்ஷன் “நீ தான் அவ வேணான்னு போயிட்ட இல்ல அப்புறம் அவள் யாரை காதலிச்ச உனக்கு என்ன கல்யாணம் பண்ணா உனக்கு என்ன” என கேட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் சமாதானமாக பேசி வேணுகோபால் தர்ஷனை மது அருந்த ஊருக்கு ஒதுக்கு புறமாக அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு சென்ற இருவரும் மது அருந்தியுள்ளனர்.

இந்நிலையில் போதை தலைக்கேறிய வேணுகோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து தர்ஷனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.  தர்ஷன் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தர்ஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். 

ஊர் மக்கள் அளித்த தகவலின் படி வேணுகோபாலை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் தெரியவந்துள்ளது. காதலுக்காக நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com