sanjay and baby 
க்ரைம்

“ஊரணியில் கிடந்த குழந்தையின் தலை” - விளையாடிய குழந்தையை அழைத்த மாமா.. மாலையில் கேட்ட உறவினரின் அலறல் சத்தம்!

வழக்கமாக குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறது என டெய்சியும் தனது வேலைகளை செய்துள்ளார்.

Mahalakshmi Somasundaram

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு ராஜா இவருக்கு திருமணமாகி டெய்சி என்ற மனைவியும்  இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கும் நிலையில், தேசிங்கு ராஜா வழக்கறிஞசராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தேசிங்கு ராஜாவின் இரண்டரை வயது குழந்தையை தேசிங்கு ராஜாவின் உறவினரான சஞ்சய் தனது வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார். வழக்கமாக குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறது என டெய்சியும்  தனது வேலைகளை செய்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து சஞ்சய் வீட்டிற்கு சென்ற உறவினர் ஒருவர் அலறி துடித்துள்ளார். சஞ்சய் வீட்டின் பின்புறம் குழந்தையின் உடல் தலை இல்லாமல் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனை அறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மகனான  BA ஆங்கிலம் படித்த சஞ்சய் குழந்தையின் உறவினர் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் தான். தனது வீட்டிற்கு அழைத்து சென்று குழந்தையை மறைத்து வைத்திருந்த கத்தியை பயன்படுத்தி கழுத்தை அறுத்து கொன்றதும் குழந்தையின் தலையை ஊரணியில் வீசி சென்றதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நீண்ட நேரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் ஊரணியில் இருந்த குழந்தையின் தலையை மீட்டனர். மேலும் சஞ்சய் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர் தானா என்பதை குறித்து முழு விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்