க்ரைம்

“பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த தாய்” - கள்ளக்காதலனுடன் செல்வதாக வாக்குவாதம்… ஆத்திரத்தில் கொலை செய்து உடலை எரித்த 18 வயது மகன்!

தீயை பாதியிலேயே அணைத்துவிட்டு வீட்டின் அருகில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் குழி தோண்டி பாதி எரிந்த சடலத்தை...

Mahalakshmi Somasundaram

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி கலர் பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயக்கூலி தொழிலாளியான 54 வயதுடைய தவசியப்பன். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த 36 வயதுடைய கனகவல்லி என்பவரை கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். கனகவல்லிக்கு முதல் கணவர் பழனிசாமி என்பவர் மூலம் ஒரு மகன் உள்ள நில்லியில் இரண்டாவது கணவரான தவசியப்பன் மூலம் பிறந்த 18 வயதுடைய கார்த்திக் மற்றும் 16 வயதுடைய சுவேதா என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இதற்கிடையில் கனகவல்லிக்கும் மேலும் சில ஆண்களுடன் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டு அந்த நபர்களுடன் தனிமையில் இருக்க அடிக்கடி வெளியூர் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த கணவர் தவசியப்பன் மற்றும் மகன் கார்த்தி ஆகியோர் கனகவல்லியை கண்டித்துள்ளனர். இதன் காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இவர்களை அவ்வப்போது உறவினர்களும் சமாதானப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கனகவல்லியின் தந்தைக்கு சாமி கும்பிட கடந்த (ஜன 15) ஆம் தேதி கனகவல்லி, சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள ஐயன் கரடு பகுதியில் வசிக்கும் தனது அக்கா ராசாத்தி வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு தனது தந்தைக்கு சடங்குகளை செய்து முடித்த கனக வல்லி தனது மகன் கார்த்தி மற்றும் அவரது அக்கா மகனான 24 வயதுடைய மணிகண்டன் ஆகியோருடன் தங்கி இருந்தார். அன்று இரவு தாய் மற்றும் மகனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கனகவல்லி தனது ஆண் நண்பர் செந்தில் என்பவருடன் தான் வாழ்வேன் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட கார்த்திக் “பலமுறை எச்சரித்து விட்டோம் ஆனால் வெளி நபர்களுடன் பழகுவதை கைவிடவில்லை” என கூறி தகராறு செய்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த கார்த்தி, மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் விஜயன் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து கனகவல்லியை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

பின்னர் கார்த்திக் தனது தந்தை தவசியப்பனுக்கு செல்போன் மூலம் நடந்த சம்பவத்தை தெரிவித்திருக்கிறார். பின்னர் தவசியப்பன் கொடுத்த யோசனைப்படி கொலை நடந்த வீட்டிற்கு அருகில் கனகவல்லியின் சடலத்தை வைத்து எரித்துள்ளனர். புகை அதிகம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்து விடும் என்று பயந்து, தீயை பாதியிலேயே அணைத்துவிட்டு வீட்டின் அருகில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் குழி தோண்டி பாதி எரிந்த சடலத்தை புதைத்து விட்டு பின்னர் எதுவும் நடைபெறாதது போல் அன்று இரவு கொலை நடந்த வீட்டில் படுத்து உறங்கி உள்ளனர்.

மறுநாள் காலை தனது சொந்த ஊரான இருப்பாளிக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் கனகவல்லியின் மகள் சுவேதா தனது தாயாருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தனது தந்தையிடம் கேட்டபோது அவரும் மலுப்பலாக பதில் கூறியுள்ளார். இதனையடுத்து உறவினர் மூலம் தனது தாயார் காணவில்லை என கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதன் பெயரில் கன்னங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.

அப்போது அக்கம் பக்கத்தினர் நள்ளிரவில் புகை வெளியேறியதாக தெரிவித்துள்ளனர். இதன் பேரில் தவசியப்பன் மற்றும் கார்த்திக்கிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கனகவல்லியை கொன்று எரித்து புதைத்து தெரிய வந்தது. இதையடுத்து கணவர் தவசியப்பன் அவரது மகன் கார்த்திக், மணிகண்டன்(24), நண்பர்கள் விஜயன்(41), சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் புதைக்கப்பட்ட கனகவல்லியின் சடலம் வட்டாட்சியர் மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.