க்ரைம்

11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்! 62 வயது முதியவரால்.. போன் மற்றும் தின்பண்டங்கள் கொடுத்து 3 ஆண்டுகளாக நடந்த கொடூரம்!

இதனால் மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும்

Muthu Lakshmi

பெற்றோர் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் செல்போனை கொடுத்து சமூக வலைதளத்தை காட்டியும், தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தும் 3 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த  62 வயது முதியவர் போக்சோ வழக்கில் கைது. 

சிவகங்கை மாவட்டம்  காரைக்குடி அருகே உள்ள கானாடுகாத்தான் அடுத்த கொத்தமங்கலத்தில் படைப்பு வீடு ஒன்றில் 2020 ஆண்டு முதல் 2023 வரை ஒரு தம்பதியினர் காவல்காரர்களர்களா வேலை பார்த்து வந்துள்ளனர், மேலும் இவர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையும் உள்ளது. இவர்களின் சொந்த ஊரான திருமயத்திலிருந்து இங்கு வந்து தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் சமையல் வேளைக்கு அடிக்கடி வெளியில் செல்வது, மனைவி கூலி வேலைக்காக வெளியில் செல்வது உண்டு. அந்த நேரத்தில் அவர்களது ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையை அதை, அந்த படைப்பு வீட்டில் கணக்குப் பிள்ளையாக இருந்த சுப்பிரமணியன் (வயது 62) செல்போன் கொடுத்து யூடுப் பார்க்க வைத்தும், தின்பண்டங்கள் வாங்கி கொடுத்தும் பலமுறை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இது சுமார் மூன்றாண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, புகார் ஏதும் அளிக்காமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு திருமயம் அருகில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இது குறித்து படைப்பு வீட்டில் காவலாளி பணிக்கு தம்பதியினரை வேலைக்கு சேர்த்து விட்ட முருகப்பன் என்பவர் “ஏன் சொல்லாமல் வேலையை விட்டு சென்றீர்கள்? என்று கேட்டு தொடர்பு கொண்டுள்ளார்.தங்கள் மகளை 6 ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே (2020-23) மூன்றாண்டுகளாக பலமுறை கணக்குப்பிள்ளை சுப்பிரமணி பாலியல் துன்புறுத்தல்  செய்ததாகவும், இதனால் மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட்டதாகவும் தெரிவித்துள்னர்.

அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு தைரியம் கொடுத்த முருகப்பன் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோரை புகார் அளிக்க வைத்தார். மகளிர் காவல் ஆய்வாளர் குற்றவாளி சுப்பிரமணியனிடம் விசாரணை செய்த பொழுது சுப்பிரமணியன் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சுப்பிரமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.