இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததாக கூறப்படும் குழந்தைகள் பாலியல் சுரண்டல் கும்பல்கள் தொடர்பான விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், உயிர் பிழைத்தவர்களின் அதிர்ச்சியூட்டும் சாட்சியங்களை வாசித்து காட்டியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
குழந்தைகள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் பாலியல் சுரண்டல், கடத்தல், பாலியல் மிரட்டல் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் குறித்து பலர் அளித்த சாட்சியங்களை ரூபர்ட் லோவ் அறிக்கையாக வெளியிட்டார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், 13 வயதில் தொடங்கிய துன்புறுத்தலின் போது மூன்று ஆண்டுகளில் 600 முதல் 700 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், அவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமையால் மருத்துவமனைக்குச் செல்லும் அளவுக்கு கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும், தான் அளித்த புகார்கள் முறையாக விசாரிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
மற்றொரு குற்ற சாட்டில் பாதிக்கப்பட்டார் கூறுகையில் "எனது பிறப்புறுப்பிலிருந்தும், மலத்துவாரத்தில் இருந்தும் இரத்தப்போக்கு ஏற்பட்டது. உடற்பாகங்கள் மிகவும் வீங்கியிருந்ததால் என்னால் உட்கார முடியவில்லை. நான் குடித்த குளிர்பானத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்டதாகவும், என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை” என்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் கூறியதாக தெரிவித்தார். இந்தத் துன்புறுத்தல் மிருகப்புணர்ச்சி வரை முற்றியதாகவும், தாங்கள் விலங்குகளைப் போல நடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் “ஒருவர் வேனின் பின்பக்கத்தைத் திறந்தபோது, 15 முதல் 20 சிறுமிகள் நாய்க் கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளதை நான் பார்த்தது நினைவிருக்கிறது," என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மற்றொருவர், "அந்த ஆண்கள் என்னை கீழே அழுத்திப் பிடித்திருக்க, அவர்கள் ஒவ்வொருவராக மாறி மாறி வாய் வழியாகவும் பிறப்புறுப்பு வழியாகவும் என்னை வன்புணர்வு செய்தார்கள், என் கைகளையும் கால்களையும் மாறி மாறி அழுத்திப் பிடித்தனர். அந்தத் வன்கொடுமைக்கு பின் நடந்ததை யாரிடமாவது சொன்னால், என்னைக் கண்டுபிடித்து கொன்று விடுவதாகவும், என் குடும்பத்தாரையும் கொள்வதாக மிரட்டினார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில சாட்சியங்களில், சிறுமிகள் அடைத்து வைக்கப்பட்டு வன்முறைக்கும் கொடூரமான பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தங்களைப் பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு லோவ் தலைமையில் நடத்தப்பட்ட தனியார் விசாரணையில், இங்கிலாந்தின் குறைந்தது 85 பகுதிகளில் குழு அடிப்படையிலான குழந்தை பாலியல் சுரண்டல் சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், சில பகுதிகளில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் இந்த குற்றச்சாட்டுகளில் அதிகளவில் தொடர்புடையதாகக் கூறப்பட்டதுடன், அதிகாரிகள் மற்றும் அமைப்புகளின் அலட்சியமும் இந்தக் குற்றங்கள் நீண்டகாலம் தொடர காரணமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் முதன் முதலில் பெரும் கவனத்தைப் பெற்றது ரோதர்ஹாம் நகரில் நடைபெற்ற பாலியல் சுரண்டல் வழக்குகள் வெளிச்சத்துக்கு வந்தபோதுதான். 2014-ல் வெளியான விசாரணை அறிக்கையின்படி, 1997 முதல் 2013 வரை அந்த நகரில் மட்டும் 1,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.
பின்னர் ரோக்டேல், ஆக்ஸ்போர்ட் உள்ளிட்ட பல நகரங்களிலும் இதே போன்ற குற்றச்செயல்கள் கண்டறியப்பட்டன. இதற்கிடையில், இங்கிலாந்து அரசு தேசிய அளவிலான விசாரணையைத் தொடங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளில் ஏற்பட்ட தோல்விகளை ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்